பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

133



ஊர்மிகின் இல்லை கரியோ ஒலித்துடன் நீர்மிகின் இல்லை சிறை.

பழிச்சொல் எழுந்தால்அதனை எளிதாக மாற்றமுடியாது. ஆகவே,தோழனின் வீட்டினுள்ளானாலும் தனியாகச் செல்வது பிறர் பழிக்க இடந்தருமாதலால் அது கூடாது என்பது கருத்து. 'நீரிமிகின் இல்லை சிறை என்பது பழமொழிதாமே தனியராக என்றது.அவ்வீட்டுக்கு உரியவன் இல்லாதபோது என்பதாம். 273

Q

274. கொடையின் அளவு

'கொடுக்கும் கொடையின் அளவு இரந்து வந்து நிற்பவர்க ளுடைய தகுதியளவாகவே இருக்கும் என்பவர்கள், கொடை யின் இயல்பையே அறியாத மூடர்கள். அது அங்ங்னம் அமைவது அன்று. இரவலர்க்கு எதனையும் இல்லையென்று ஒளியாதவர்களாய்க், கைவண்மையினை மேற்கொண்ட புரவலர்களின் சீர்மையினுடைய அளவை ஒட்டியதாகவே அது எப்போதும் விளங்கும். நீரின்கண் உள்ள மலர் நீரளவாக இருப்பது போலவே, சிறந்த செயல்கள் எல்லாம் அவற்றைச் செய்பவரின் சிறந்த பண்பினள வாகவே இருக்கும் என்று அறிதல் வேண்டும். - இரவலர் தம் வரிசை என்பார் மடவார்;

காவலராய்க் கைவண்மை பூண்ட-புரவலர் சீர்வரைய வாகுமாம், செய்கை சிறந்தெனைத்தும் நீர்வரைய வாநீர் மலர். - கொடையின் அளவு கொடுப்பவரின் சீர்மை அளவாகவே இருக்கும் என்பது கருத்து."நீர் வரையவாம் நீர் மலர்' என்பது பழமொழி நீரளவே யாகுமாம் நீராம்பல் என்பதும் இதே கருத்தைக் கூறும். - - 274 275. வஞ்சகனும் வேலையும்

r உள்ளத்திலே தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெரியவர்களாகச் செய்து, தனக்குத் தொலைவான இடத்திலே விட்டிருந்தால், அவர்கள் உறுதியாக இவனுக்கு உதவியான ஒரு செயலை யுமே செய்ய மாட்டார்கள். அப்படி விடுவது, ஆமையைப் பிடித்த ஒருவன், அதனை நீண்டகுளத்தினுள்ளே போய்க் குளித்து விட்டு வா’ என்று அதன் தன்மையறியாமற் போகவிட்ட செயலொடு ஒக்கும்.

அகந்தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி இகந்துழி விட்டிருப்பின் அஃதால்--இகந்து