பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பழமொழி நானூறு மூலமும் உரையும்



உடையதாயிருக்கும் அல்லவா. அதுபோலவே,பெரிய செயல் செய்த அவர்களின் உயர்வும் பெரியதாகும்.

அரிதவித்து ஆசின்று உணர்ந்தவன் பாதம் விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்து, உரியதனிற் கண்டுணர்ந்தார் ஒக்கமே, போலப் பெரியதன் ஆவி பெரிது.

உடலின் சிறந்த செயல்கள் உயிருக்கும் சிறப்பைத் தரும். 'பெரிய தன் ஆவி பெரிது’ என்பது பழமொழி, ஆசு-குற்றம் செயற்கரிய செய்வாரே பெரியர்; இவ்வுலகில் ஐம்புல இச்சை களை அவித்தலே செயற்கரிய பெருஞ்செயல், அச் செயலைச் செய்து உயர்ந்த பெரியோனின் திருவடிகளை உளங் கொள் வோம். இப்படி உளம் கொள்பவரும் ஆசைகளை அவித்துப் பெரியவராக விளங்கிப் பெருமையடைவர் என்பதும் இதன் கருத்தாகும். . - 1

நூல் 2. மேல்நிலை அடைதல்

மணல்மேடுகளிலே விளங்கும் அடும்பின் கொடிகளிலே, பூக்கள் மலிந்திருக்கும் கடற்கரை நாட்டிற்கு உரியவனே! மிகுதியான பழிச் செயல்களை ஒருவன் அதிகமாகச் செய்து விட்டால், மீண்டும் அந்தப் பழியைப் போக்கிக் கொள்ளத்தக்க வழிகளையும் அவன் அறிந்திருக்க வேண்டும். அப்படி அறியாதவன் மேல்நிலையடைதல் என்பது ஒரு போதும் நடவாததாகும். அகலினுள் உள்ள நீரிலே நீர் துளும்பக் குளித்துத் தூய்மை யாவேன்’ என்பது போல, அது ஒரு போதும் நடக்கமுடியாததேயாகும்.

மிக்க பழிபெரிதும் செய்தக்கால், மீட்டதற்குத் தக்கது அறியார், தலைசிறத்தல்-எக்கர் அடும்பு அலரும் சேர்ப்ப! 'அகலுள் நீ ராலே துடும்பல் எறிந்து விடல்.’ பழியொடுபட்ட வாழ்வு பயனற்ற வாழ்வு. அகலுள் நீராலேதுடும்பல் எறிந்துவிடல் என்பது பழமொழி.துடும்பல் எறிதல் நீர் துளும்பிவிழக்குதித்து நீராடல். 2 3. அறநெறியாளனுக்கு உபதேசம்

மாறுபாடில்லாத செயல்களின் மூலமாகவே ஒருவன் பெரும் பொருள் பெற்றனன். அந்தப் பொருள் வந்து சேர்ந்த