பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

பழமொழி நானூறு மூலமும் உரையும்



284. உயர்ந்தவர் வழுவார்

பஞ்சத்தினாலே தன்மேல் வந்துற்று வருந்தும் பசி பெரி தாகிப் போயின காலத்தும், புலியானது சென்று புல்லினை ஒரு போதும் மேய்வதில்லை.அதுபோலத் தாம் வறுமையுற்ற காலத் தினும், உயர்ந்த பண்புடையவர்கள், தாம் நிலைபெற்ற அந்த உயர்ந்த நிலையினிடத்திலேயே சற்றும் தளராமல் நிற்பவரா வார்கள். * - .

ஒற்கத்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல்-வற்பத்தால் தன்மேல் நலியும் ப்சிபெரி தாயினும் புல்மேயா தாகும் புலி. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாததுபோல உயர்ந் தோர் வறுமையடைந்தாலும் இழிந்த செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது கருத்து.'பசி பெரிதாயினும் புல் மேயா தாகும் புலி’ என்பது பழமொழி. . 284 285. புல்லுரைக்கு எதிர் உரை

இனிய தேன்கூட்டிலுள்ள தேனை, மந்திகள் தம் விரலினாற் குத்தி உண்கின்ற வளமுடைய மலைநாடனே! தம்மைப் பசு குத்தினதென்று அதனைத் தாமுங் குத்துபவர் எவருமே இலர். ஆதலால், ஆராய்ந்த அறிவினை உடையவர்களாக அல்லாத கீழோர்களின் புன்மையான பேச்சுக்குத் தாமுஞ் சினங்கொண்டு, கற்றறிந்த சான்றோர் எதிர்ப்பேச்சுப் பேச்மாட்டார்கள் என்று அறிவாயாக ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக் காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன் முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப் பசுக்குத்தின் குத்துவார் இல். அறிவற்றோர்பேசும் புன்சொற்களைக்கேட்டசான்றோர், அதனைப் பொறுப்பரேயல்லாமல், எதிர்ப்பேச்சுப் பேசமாட் டார்கள் என்பது கருத்து. 'பசுக் குத்தின் குத்துவார் இல்’ என்பது பழமொழி. छु 285 286. வீரமற்ற வேந்தன் -

"கொடைப்பண்பும் செங்கோன்முறைமையும்,படைகுடி கூழ் முதலியவற்றால் கோட்பாடு உள்ள உணர்வும் இவர் உடையவர்” என்று சொல்லப்பட்டுத் தாம் ஒழுகி வந்தாலும்,