பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

139



பகைவர்கள் வலியிழந்து சிதறியோடும்படி அவரை மேற் சென்று வெற்றிகொள்ளும் போராண்மை இல்லாதவர்களுடைய படை யெழுச்சியைவிட அவர்களுடைய படைக்கலன்களைப்பொலி வுடையனவாக வைத்து அழகு பார்ப்பதே நல்லதாகும். கொடையும் ஒழுக்கமும் கோளுள் உணர்வும் உடையர் எனப்பட்டு ஒழுகிப், பகைவர் உடையமேற் செல்கிற்கும் ஊற்றம் இலாதார் படையின் படைத்தகைமை நன்று.

பிறவாற்றால் நல்லவனாயினும், பேராண்மை இல்லாத வேந்தன் நாடு காவலுக்குத் தகுதி உடையவனல்லன் என்பது கருத்து. 'படையின் படைத்தகைமை நன்று’ என்பது பழ மொழி. - - - - 286 287. உலகம் விரும்பும் ஒழுக்கம் -

கானகங்களை உடைய நாடனே தாம் மேற்கொள்ளும் அந்த ஒழுக்கத்தினை, ஒலிக்கும் கடல் சூழ்ந்த உலகத்திலே உள்ளவரெல்லாம் விரும்புவார்கள் என்பதை அறிந்தல்லாமல், எவரும் எந்த ஒரு ஒழுக்கத்தையும் மேற்கொள்ளவே மாட் டார்கள். அப்படி, உலகத்தவர் எல்லாரும் விரும்புவது அறிந்து பயின்றதான ஒழுக்கம், இம்மைக்கு மட்டுமின்றி மறுமைக்கும் (மேலுலகத்திற்கு) உதவியாக விளங்கும். -

ஒதநீர் வேலி உலகத்தார் அந்நெறி காதலர் என்பது அறிந்தல்லால்--யாதொன்றும் காணக நாட! பயிலார் பயின்றது வானகம் ஆகி விடும்.

உலகோர் விரும்பும் நல்லொழுக்க நெறியிலே நிலைத்து நிற்பவர், இம்மையிலும் மறுமையிலும் இன்புறுவர் என்பது கருத்து.'பயின்றது வானகம் ஆகிவிடும்’ என்பது பழமொழி.287 288. தேவரும் அஞ்சுவர்

விளங்கும் அருவிகள் பாய்கின்ற மலைநாடனே! பண்பு கெட்ட கயவர்களுடனே தேவர்களுங்கூட ஒரு வார்த்தை சொல்லமாட்டார்கள். ஆதலால், கற்று வல்லவர்கள் கூடி யிருக்கின்ற அவையின் நடுவிலே வந்திருந்து, கல்லாமலும் கற்பவர் சொல்வதைக் கேளாமலும் சொல்லாடுகின்ற தன்மை உடையவர்களைக் கண்டாலும் அவருக்கு அஞ்சி ஒதுங்குதலே வேண்டும். - - -