பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

141



வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை என்னெஞ்சே! இன்றிழிவை யாயினாய்- சென்னெஞ்சே! இல்சுட்டி நீயும் இனி துரைத்துச் சாவாதே பல்கட்டப் பெண்டீர் மகார். -

குடும்பம், துறவு வாழ்வுக்குப் பலவகையினும்செல்ல விடாது ஒருவனைத் தடுக்கும் தளையாகும் என்பது கருத்து. 'பல்கட்டப் பெண்டீர் மகார்’ என்பது பழமொழி. பெண்டாட்டி கால் விலங்கு பிள்ளையோ சுள்ளாணி' எனவும் இப்பழமொழி வழங்கும். - 290 291. பூர்வ புண்ணியம்

எவருக்கும் வழங்காதவர்கள்; தாம் எவ்விதமான ஒரு வலிமையும் இல்லாதவர்கள்; பொல்லாங்கே மிகுதியாகப் பேசுகிறவர்கள்; ஒருவருக்கு துன்பம் வந்தால் தாம் வருந்தி யாகிலும் உதவாதவர்கள்; இப்படிப்பட்டவர்களும் கேடில்லாத செல்வத்தைப் பெற்றிருக்கிறார்க்ள்ே? என்றால், அது, பழையதாக உரம் பெற்றிருப்பதான வயலானது பிற்காலத்தில் ஒருரமும் போடாவிட்டாலும்கூடப் போரிட்டுக் கட்டும்படி செழுமையாக விளைவதனைப் போன்றதாகும்.

வழங்கார், வலியிலார், வாய்ச்சொல்லும் பொல்லார் உழந்தொருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார் இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார் பழஞ்செய்யோர் பின்று விடல்.

முன் போட்ட உரம் பிற்காலத்துப் பயன் தருவனபோல அவருடைய முன்சென்மத்துப் புண்ணியப் பயனே அவரிடம் செல்வம் சேர்ந்திருப்பது என்க. பழஞ் செய் போர் பின்று விடல்’ என்பது பழமொழி.(பின்பு-பிற்காலம்) 291 292. பள்ளியில் பிச்சை கேட்டல் - -

வள்ளிக் கொடியிலே குரங்குகள் அமர்ந்து ஊசலாடிக் கொண்டிருக்கின்ற மலைநாடனே மரத்தைப்போல உணர்ச்சி யற்றவராக விளங்கும் வன்மையான உள்ளம் உடையவர்கள், முன்னே நின்று யாசித்தவர் பெறுவது எதுவுமே இல்லை. அப்படி யாசிப்பது இரந்து உண்ணும் சமண முனிவர்கள் வாழும் பள்ளியிலே சென்று ஒருவன் பிச்சை கேட்டுநிற்பதைப் போன்றதாகும்.

மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று இரந்தார் பெறுவதொன்றில்லை--குரங்கூசல்