பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

பழமொழி நானூறு மூலமும் உரையும்



வள்ளியி னாடும் மலைநாட! அஃதன்றோ பள்ளியுள் ஐயம் புகல்.

தாமே ஊரிற் பிச்சையேற்று உண்பவர் சமண முனிவர்கள். அவர்கள் மடத்திலே சென்று கேட்டால்பிச்சை கிடைக்குமோ? அதுபோலவே வன்னெஞ்சனிடம் சென்று இரப்பவனுக்கும் எதுவும் கிடையாது என்பது கருத்து. 'பள்ளியுள் ஐயம் புகழ்' என்பது பழமொழி. சமணப் பள்ளி போன்றே பெளத்தப் பள்ளியும், 'பள்ளி'யின் பொருளாகக் கொள்ளலாம். 292 293. பழம்பகை மாறாது r

முழங்கும் இடிக்குரலினையுடைய மேகத்துக் குளிர்ந்த பெயலாகிய மழையினைப் பெற்றால், கிழங்கு உடைய புல் பூண்டுகள் எல்லாம் ஒரு வகையே அனைத்தும் முளைத்து விடும். பழைய தான பகைவர் ஒருபோதும் நட்பினராதல் என்பதே இல்லை யாகும். அதனால், அவரை விரும்பிச் சென்று, வேரூன்றும்படி யாக நட்புச்செய்து ஒழுகுதல் என்பது எப்போதுமே வேண்டாம்.

தழங்கு குரல் வானத்துத் தண்பெயல் பெற்றால் கிழங்குடைய வெல்லாம் முளைக்குமோ ராற்றால் - - விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டொழுகல் வேண்டா பழம்பகை நட்பாதல் இல். -

நட்பு நன்றாக வேரூன்றியதும், அவர் தம் பழைய பகைமையைத் தீர்த்துக்கொள்ளவே முற்படுவர் என்பது கருத்து. "பழம் பகை நட்பாதல் இல்’ என்பது பழமொழி. 293 294. உள்ளத்து மாண்பற்றார்

வெள்ளம்போல அளவிடற்குஅரிய மாண்புகள் எல்லாம் உடைய உறவினர்கள் கூடியிருப்ப, அவ்விடத்திலே மனத்தின் கண் மாண்பில்லாத ஒருவர் இருந்தால், அவரை அறிந்து ஆராய்ந்து அவ்விடத்தை விட்டுப் பிரிந்து விலக்கிவிட்டே, இரகசியமான செய்திகளைப் பேசவேண்டும்.அப்படிவிலக்கா திருந்தால், அங்குப் பேசப்பட்டதெல்லாம் பறையினிடத்தே குறுந்தடியிட்டு அடித்து ஊர்முழுவதும் கேட்கச் செய்தது போல, எங்கும் பரவியதாக ஆகிவிடும்.

வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல் பறைக்கண் கடிப்பிடு மாறு.