பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

பழமொழி நானூறு மூலமும் உரையும்



உண்ணார் பழம் என்பது பழமொழி, கலை - குரங்கினத்துள் ஒன்று முசுக்கலை எனவும் கூறுவர். 296 297. செய்தவன் புகழ்

பனையினது பழமானது முற்றிவிட்டால், அது தாய்ப் பனையின் தாளின்மேலேயே விழுந்துவிடும். அங்ங்னமே, தான் மகிழ்வடையுமாறு செய்து முடிப்பதற்கு ஏவிய செயல் கள், அந்தந்தக் காரியங்களின் தகுதியளவேயாகிய பயனோடும் கூடி, அந்தக்காரியங்கள் செவ்வையாக முடிவுறுமானால், அவற்றைச் செய்து முடித்தவன் மேலேயே ஏறிநிற்பதாகும். உவப்ப உடன்படுத்தற் கேய கருமம் அவற்றவற்றாந்துணைய வாகிப் பயத்தால் வினைமுதிரின் செய்தான் மேல் ஏறும்; பனைமுதிரின் தாய்தாண்மேல் வீழ்ந்து விடும்.

ஏவலாற் சென்று செயலைச் செய்தாலும், செயல் வெற்றி பெற்றால், அதனால் அதனைச் செய்தவனுடைய புகழே மிகுதி யாகும்.ஆகவே,செயலைத்திறமையாக முடிப்பதிலேஈடுபடுதல் வேண்டும் என்பது கருத்து. பனை முதிரின் தாய் தாள்மேல் வீழ்ந்து விடும் என்பது பழமொழி. - 297 298. இரகசியம் காத்தல் - - பெரிய மலைகளை உடைய நாட்டிற்கு உரியவனே! பிறர் அறியக் கூடாத அரியதான ஒர் இரகசியத்தை, அமைந்த அறிவுடையர்களான ஆன்றோர்களே வெளியிடாமல் காப் பார்கள்.அத்தகைய அரிய இரகசியத்தை, உள்ளத்தால் சிறுமை யாளரான கீழோர்க்கு உரைத்தல் ஒருபோதுமே கூடாது. அவர்க்கு உரைத்தலானது, உயரமான பனையின் மேலே பஞ்சைக்கொண்டு வைத்துக்கொண்டு, ஒருவன் பஞ்சு கொட்டுவதைப் போன்றதாகும். •

பெருமலை நாடா! பிறரறிய லாகா அருமறையை ஆன்றாரே காப்பர்-அருமறையை நெஞ்சிற் சிறியார்க்கு உரைத்தல், பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட் டற்று. பனைமேல் வைத்துக் கொட்டும் பஞ்சு காற்றாலே எடுத்துச் செல்லப்பெற்று ஊர்முழுவதும் பரந்துவிடுவது போலச் சிறுமையாளர்க்கு உரைத்த இரகசியமும் எங்கும் பரந்துவிடும் என்பது கருத்து. 'பனையின்மேல் பஞ்சிவைத் தெஃகிவிட்டற்று' என்பது பழமொழி. 298