பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

145



299. படைமுனையில் தன்னை வியத்தல்

பகைவர் படையெடுத்து வந்து எதிர்நிற்கின்ற அந்தப் பொழுதிலே, ஒப்பற்றவனாகிய ஒரு வீரமகனானவன், தன்னை எவ்வாறாயினும் வியந்து பேசாதிருப்பானாக, தன் மேற் போர் செய்யவந்தபகைவர்கள் தன்னைப்போல வீரத்தளவிலே நன்மை இல்லாதவரேயாயினும், மிகவும் பலராயிருக்கின்றனர் என்று அறிவானாக. பன்மையிலும் பெருமை உடையது எதுவு மில்லை என்பதே உண்மையாகும். -

ஒன்னார் அடநின்ற போழ்தின் ஒருமகன் தன்னை எனைத்தும் வியவற்க--துன்னினார் நன்மையிலராய் விடினும், நனிபலராம் , பன்மையிற் பாடுடைய தில்.

பலர் கூடிஎதிர்த்து வந்தபோது, உத்தகைய பெரு வீரனும் அனைவரையும் எதிர்த்து நிற்க முடியாமல் விழுந்து விடுவான்; ஆதலால், அரசன் ஒருவன்,தன்படைத்துணையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பது கருத்து. ‘பண்மையிற் பாடுடையது இல்’ என்பது பழமொழி. - 299 300. அவையிலே புன்சொல்

விரிந்து அகன்ற அறிவினை உடையவர்களிடையிலே புகத்தகுதியற்றவரான மூடர்கள் புகுந்து, தாரமாகவே கொண்ட பகைமை காரணமாக வீணத் தனத்தோடு சேர்ந்த இழிவான சொற்களைச் சொல்லுதல், அவருக்கேமிகவும் அவமானத்தைத் தருவதாகும். அது பாணர் சேரியிலே புகுந்து, ஒருவன் தானும் பாடுவான்போல வாய் திறந்து பல்லைக்காட்டிநிற்பதுபோன்ற தாகும். f - -

- அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்

புகலியார் புக்கவர் தாமே--இகலினால் வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ பாண்சேரிப் பற்கிளக்கு மாறு: பாணர் குடியினர் இசைவல்லார்; அவரிடையே சென்று இசையறியான் ஒருவன் வாய்திறந்தால் அவனே அவமானம் அடைவான்; அதுபோலவே, அறவோர் அவையிற் புகுந்து புன்சொல்பேசியவனும் அவமானமடைவான் என்பது கருத்து. ‘பாண்சேரிப் பற்கிளக்கு மாறு என்பது பழமொழி.பற்கிளத் தல் வாய்திறந்து பாட முயலுதல். - 300