பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

151



அவரவர் செய்யும் செயல்களுக்குத் தகுந்த குணத்தினராக மாறுவதும் இதனையே வலியுறுத்தும். 310 311. பெரியவர் பெருமை -

நாடெங்கும் அறியப்பட்ட புகழினையுடைய பெரிய செல்வராக விளங்கிய ஒருவர், அந்தச் செல்வமெல்லாம் இழந்து போனவர்களாகத் தளர்ச்சியுற்ற காலத்தினும் பிறர் ஒருவருக்குத் தாழ்வார்களோ? வாடிப்போய் நரம்புகள் வலித்துச் சுருங்கிக் கிடந்து இருக்கின்றதாயினும் புலியினுடைய தலையை நாயானது அஞ்சாமற் சென்று ம்ோந்து பார்ப்பது என்பது இல்லையல்லவா? -

நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து வாடிய காலத்தும் வட்குபவோ!--வாடி வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும் புலித்தலையை நாய்மோத்தல் இல்.

. . புலி எவ்வளவுதான் வாடித்தளர்ந்துகிடந்தாலும்,நாய்க்கு அதனருகே சென்று மோந்து பார்க்கும் தகுதி ஒருபோதும் உண்டாவதில்லை. அதுபோலவே பெரியோர் வாடி வறுமை யுற்றாலும் சிறியோர்க்கு அவரை அணுகும் தகுதி ஒருபோதும் உண்டாகாது என்பது கருத்து. ‘புலித்தலையை நாய்மோத்தல் இல் என்பது பழமொழி. அதற்குத் துணிவு வராது என்பது கூறப்பெற்றது. 311 312. கயவருக்குச் செய்த நன்மை

கண்ணோட்டம் ஏதுமற்ற கயவர்களின் கருத்தை உணர்ந்து அளவு கடந்து அவரோடு நெருங்கிப் பழகி இதனால் துன்பம் வரும் என்று கருதாதவர்களாக அவருக்கு நன்மைதருமே என்ற நல்லெண்ணத்தால் ஒன்றைச் செய்தாலும், செய்தவர்க்குத் துன்பமே ஏற்படும்.அது புலியின் மீது அருள்கொண்டு ஒருவன் அதன் முகத்திலே அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் உண்ணியைப் பறித்துவிட முயல்வதைப் போன்றதேயாகும்.

கண்ணில் கயவர் கருத்துணர்ந்து கைமிக நண்ணியவர்க்கு நலனுடைய செய்பவேல், எண்ணி, இடர்வரும் என்னாம், புலிமுகத்து உண்ணி பறித்து விடல். கயவர்க்கு இரக்கப்பட்டு நன்மை செய்வதுகூடத் தீமை யாகவே முடியுமென்பது கருத்து.'புலிமுகத்து உண்ணி பறித்து