பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

153



315. அறிவுடையார் தொடர்பு - இவை நல்லன என்றும், இவை தீயன என்றும் தாமே ஆராய்ந்தும், பிறர் எடுத்துக்கூறும் நல்லனவாகிய பிறவற்றை உணர்ந்தும் கொள்ளுதலான அறிவுடையவரை, ஒருவன், தன்னுடைய பேச்சாற்றலால் விரைந்து சென்று தன்வயமாகச் செய்து கொள்ளுதல் என்பது மிகவும் சிறந்ததாகும். அது, பழகிய ஓர் எருதைக் கொண்டு பழகாத மற்றோர் எருதையும் பழக்கித் தன்பால் பணிசெய்யச் சேர்த்துக் கொள்வது போன்றதாகும். . - -

நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின் வல்லிதின் நாடி வலிப்பதே, புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு மாறு. . 'அறிவுடையவன் ஒருவன் சிறந்த அறிவுடைய பிறரையும் தன் பக்கமாகச் சேர்த்துக் கொள்வது சிறந்தது என்பது கருத்து. ‘புல்லத்தைப் புல்லம் புறம் புல்லுமாறு என்பது பழமொழி புல்லம்-எருது புல்லுமாறு சேர்த்துக்கொள்ளும் வழி 315 316. கீழோரோடு வாழ்தல் - *

பழிபாவங்களைச் செய்வதற்கு நாணமற்றவர்கள்; பிறர் மேல் சற்றும் இரக்கம் என்பதே இல்லாதவர்கள்; எப்போதும் நன்மை அல்லாத செயல்களையே செய்து ஒழுகுகின்றவர்கள்; இவர்கள் சான்றோரால் விரும்பப்படாத அறிவற்றமாக்களுக்குச் சமமா வார்கள். இத்தகையவர்களை விருப்பமுடன் நடத்தி, இவர்களோடு கூடி வாழ்தலையும் ஒருவன் செய்தல், புழுவை உள்ளே பெய்துவைத்துத் தன் புண்ணைப் பொதிந்து கட்டிவைப்பதுபோன்ற அறிவற்றசெயலாகும். - நாணார்பரியார் நயனில செய்தொழுகும் , # பேணா அறிவிலா மாக்களைப் பேணி . ஒழுக்கி அவரோடு உடனுறை செய்தல்,

புழுப்பெய்து புண்பொதியு மாறு. - புழுவை உள்ளேவைத்துப் புண்ணை மூடினால், சீழ் பெருகி நோய் மிகுதியாகித் துன்புறுத்தும். அதுபோல, நொடிக்கு நொடி துன்பமாக அமைவது கீழோர் உறவென்பது கருத்து. “புழுப் பெய்து புண் பொதியுமாறு’ என்பது. பழமொழி. பிள்ளைப் பூச்சியை மடியிற்கட்டிக் கொள்வது போன்றது என்பதும் இதே கருத்தினதுதான். 136