பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

155



தொழிலைக் கயவர்களிடத்தே காட்டி, அதனைச் செய்து முடிக்கும்பொறுப்பையும்அவர்கள்மேல்வைத்து,அவர் எமக்கு எல்லாம் சிறப்பாகச் செய்வார்கள்’ என்று கருதி ஒருவர் . அமர்ந்திருத்தல், அது அறிவற்ற செயலாகும் அது நாறல்மீனைக் காயவைத்த இடத்திலே பூனையைக் காவல் வைத்தது போன்ற செயலாகும்.

காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர் ஆக்குவர் ஆற்ற எமக்கென்றே அமர்ந்திருத்தல், மாப்பிணை நோக்கின் மயிலன்னாய்! பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை.

பூனை, மீன் அனைத்தையும் தானே தின்று அழித்து விடுவதைப் போலவே, அக் கயவரும் எல்லாவற்றையும் தாமே தின்று ஏப்பமிட்டுவிடுவர் என்பது கருத்து. பூசையைக் காப்பிடுதல் புன்மீன் தலை’ என்பது பழமொழி. 319 320. அடைந்தவர்மீது ஐயம் -

பூண் அணிந்த இளைய மார்பகங்களையுடைய, பொன் வளை அணிந்தவளே! தாம் பூண்ட பறையிலே அறைந்து ஒலி யெழுப்பாதுவாளாது இருந்தவர் எவருமே இல்லை. ஆதலால், தம்மிடத்தே செயல் செய்பவராக அடைந்த பணியாளரை அங்கே இங்கே என்று சொல்லி ஏவி அலைக்கழித்தல் வேண்டாம். அவர்மாண்பற்றவர் என்ற செய்தி ஏதும் இரகசிய மாகக் கிடந்ததொன்று அல்லவே? r - - ஆண்டீண்டு எனவொன்றோ வேண்டா அடைந்த்ாரை

மாண்டிலா ரென்றே மறைப்பக் கிடந்ததோ? பூண்தாங்கு இளமுலைப் பொற்றொடி பூண்ட பறையறையார் ஆயினார் இல்.

பூண்டபறையினை அடித்துப்பார்ப்பதே உலகத்தோரின் இயல்பு; அதுபோலப்பணிசெய்பவன் சிறுபிழைகள் செய்வதும் கூடும்; அவற்றைப்பணிகொள்வார்பாராட்டலாகாதுஎன்பது கருத்து. பூண்ட பறையறைபார் ஆயினார் இல்’ என்பது பழமொழி. 320 321. பூவும் பெரியாரும்!

ஒளிவீசும் இலைபோன்ற கூர்மையான முனையை உடைய வேலினோடு,நேராகப்பொருந்துகின்ற கண்களை உடையவளே! உயர்ந்த குடியிலே பிறந்தவர்களும் தமக்குத் தாழ்ந்த கீழ்மக்க