பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

பழமொழி நானூறு மூலமும் உரையும்



ளோடு சேர்ந்தவர்களாக நடப்பார்களானால், அதனால் அந்தக் கீழ்மக்களும் உயர்பண்பு பெறமாட்டார்களா என்று கருதியே யாகும். அதுதான் மணமுள்ள பூவுடனே மணமற்ற நாரையுஞ் சேர்த்துக் கட்டுவதுபோன்றது.

பெரிய குடிப்பிறந் தாரும் தமக்குச் சிறியார் இனமாய் ஒழுகுதல்-எறியிலை வேலொடு நோரொக்கும் கண்ணாய் அஃதன்றோ பூவொடு நாரியைக்கு மாறு.

பூவோடு சேர்ந்த நாரே மணம் பெறும்; அன்றிப் பூவின் மணங் குறைவதில்லை. அதுபோலவே, பெரியர் சிறியாரோடு சேர்வதனாலும் தம் இயல்பிலே குறைய மாட்டார் என்பது கருத்து. பூவோடு நாரியைக்கு மாறு’ என்பது பழமொழி. 321 322. அரசர்க்கு எளிது -

தம்முடைய புகழானது உலகத்திலே நிலைத்து நிற்கும் படியாகத் தம்மை வந்து இரந்தவர்கட்கு எல்லாம் தாம் பெற் றுள்ள பொருள்களை இல்லை என்னாது கொடுத்துக்கொண்டி ருப்பதே வள்ளன்மை எனப்படும், தம் பகைவரை அவராண்ட நாட்டினின்றும் அகற்றி அதனையும்த்ம்நாட்டோடுசேர்த்துக் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு எதுதான் அரிதான செய லாகும்? ஒரு பெண்ணை மகளாகவோ, மனைவியாகவோ பெற் றவன் ஒருவன், அவளுக்காகச் செய்வதற்கான பொருட் செல வுக்குப்பயப்படுவானோ?

ஏற்றார்கட் கெல்லாம் இசைநிற்பத் தாமுடைய மாற்றார் கோடுத்திருப்ப வள்ளன்மை--மாற்றாரை மண்ணகற்றிக் கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என்னரிதாம் பெண்பெற்றான் அஞ்சான் இழவு. -

புகழுக்காக, இரப்பார் உவப்ப எந்தப் பொருளையும் வழங்குவதே பேரரசர்களின் இயல்பு என்பது கருத்து. பெண் பெற்றான் அஞ்சான் இழவு என்பது பழமொழி. இழவுபொருட்செலவு. 322 323. தமரே உதவுபவர்.

கருமை மிகுந்த அடர்த்தியான கூந்தலையும், பசிய தொடி யினையும் உடையவளே! உண்மையாக ஆராய்ந்து பார்த்தோ மானால், அயலார் மற்றொரு பிறரான அயலாருக்குச் செய்வது என்ன இருக்கிறது? மழையானது ஒருகாலத்தே பெய்யவில்லை