பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

157



என்றாலும், அடுத்துப்பருவம்வந்ததும் தவறாதுபெய்யும்.அது போலவே, உறவினர் ஒருகாலத்து உதவாவிட்டாலும் ஆபத்துக் காலத்தில் தாமாகவே வந்து உதவுவார்கள் என்று அறிவாயர்க,

மெய்யா உணரின் பிறர்பிறர்க்குச் செய்வதென்? மையார் இருங்கூந்தல் பைந்தொடி எக்காலும் செய்யார் எனினும் தமர்செய்வர் பெய்யுமாம், பெய்யாதெனினும் மழை.

ஒர் உதவியும் செய்யாதவர்போலத் தோன்றினாராலுங் கூட, உறவினர், ஆபத்துக்காலத்தில் தவறாமல் வந்து உதவுவார்கள்’ என்பது கருத்து. 'பெய்யுமாம் பெய்யா தெனினும் மழை என்பது பழமொழி.மலைபோலக்கைம்மாறு கருதாது உறவினரும் சமயத்தில் உதவுவர் என்பதாம். 323 324. பெற்றதனால் மகிழ்க! -

தம்மோடு உரிமையோடும் பிரிவின்றிப் பழகியதனைக் கண்டுபோற்றப்படுபவர்கள், உள்ளத்திலே மாறுபாடில்லாமல், தாம் அந்த நட்பினாற் பெற்றதனைக் கொண்டு மகிழ்ச்சி அடை யாதவர்களாகப் பின்னும் பெறவேண்டும் என்று பேராசை கொள்வார்களானால், அது தீமை தருவதாகும். ஆழமாக மிகவும் தோண்டினால், நிலத்தினுள்ளே பாம்பு இருக்கக் காண்கின்றவர்களையும் உடையது இவ்வுலகம்

உரிதனிற் றம்மோடு உழந்தமை கண்டு பிரிவன்றிப் போற்றப் படுவார்-திரிவின்றித் தாம்பெற்றதனால் உவவார்; பெரிதகழின் பாம்புகாண் பாரும் உடைத்து.

நண்பர்களின் உதவியைப் பெற்றவர்கள், பெற்றதனால் மட்டும்திருப்தியடையாமல் மேலும்மிகுதியாகப்பெறுவதற்குப் பேராசை கொண்டனரானால் அத்தகைய நட்பினால் தொல்லையே விளையும் என்பது கருத்து."பெரிதகழின் பாம்பு காண்பாரும் உடைத்து’ என்பது பழமொழி. 324 325. பொறுப்பில்லாத செயல் அழியும்

தாம் மேற்கொண்டதம்முடைய செயலைத் தாமே செய் யாமல், சோம்பல்கொண்டு முடிக்கும் துணிவு இல்லாதவர் களிடத்திலே செய்யுமாறு விட்டு வைத்தால், அதுவே தவறு. அஃதன்றியும், அப்படிப் பொறுப்பை ஒப்பித்ததனால் செருக் குற்று அதனை மறந்துவிட்டுச் சுற்றிக் கொண்டும் இருந்தால், அச்செயல் மிகவும் சிதைவுற்று விரைவிலேயே அழிந்து விடும்.