பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

பழமொழி நானூறு மூலமும் உரையும்



விதைத்தாலும் நாறாத வித்துள; பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு. - எவ்வளவு முயற்சியும் கருத்தும் எடுத்துக் கொண்டாலும் பேதைக்கு உணர்வு கொளுத்த எவராலுமே முடியாது என்பது கருத்து. பேதைக்கு உரைத்தாலும் தோன்றாது உணர்வு' என்பது பழமொழி. 329 330. தருமத்தால் மோட்சம் - -

மென்மையான இயல்பினையும், தேய்ந்து துவண்டு நுண்ணிதாக விளங்கும் இடையினையும் உடையவளே! அறிவாலே மாட்சியுடையவர், வளமான பெருஞ்செல்வத்தைப் பெற்றவிடத்து, அதனால் தாம் மறுமையிலும் இன்புறும் படி யாகத் தமக்குப் பாதுகாப்பான அறம் முதலியவற்றைச் செய்து வருவார்கள்.அதுவே, பசுமையான கரும்பைத்தின்று அப்போ தைக்கு இன்புற்றும். பின்னர்ப் பயன்படுமாறு பாகு காய்ச்சி வெல்லக் கட்டியாக்கி வைத்தும் பயன்படுத்து வதனோடு பொருந்துவதாகும். -

மல்லற் பெருஞ்செல்வம் மாண்டவர் பெற்றக்கால் செல்வழியும் ஏமாப்பச் செய்வதாம்--மெல்லியல் சென்றொசிந் தொல்கு நுசுப்பினாய் பைங்கரும்பு மென்றிருந்து பாகு செயல். - செல்வம் பெற்றவர் இம்மைக்கும் மறுமைக்கும் இலாப கரமான வழிகளிலே அதனைச் செலவிட்டுத் தமக்குநிலையான உறுதி தேடிக் கொள்ளல் வேண்டுமென்பது கருத்து. "பைங் கரும்பு மென்றிருந்து பாகு செயல்’ என்பது பழமொழி. 330 331. தீயவர் நட்பாகி உதவார் -

நெஞ்சமே! நீ அவர்மேற்கொண்டுள்ள ஆசையைக் கை விட்டுத் திருந்துவாயாக சுவர் எடுக்கின்றபோதே ஒட்டி ஒன்று சேராத மண், அரிதாளை அரிந்து கலந்து சேரவமையக் கூட்டிப் பிசைந்தாலுங்கூடப் பொருந்தி சுவர்வைக்க ஆவதே இல்ல்ை. அதுபோலவே, தீமையான எண்ணத்தை உடையவர்கள் இவர் வருத்தம் அடைந்தாரே என்று கருதி, என்றா வது நமக்கு ஆதரவாக நின்று உதவுவதும் உண்டோ? ஒருபோதும் அவர் உதவார் என்று அறிவாயாக.

திருந்தாய்நீ ஆர்வத்தைத் தீமை உடையார் வருந்தினார் என்றே வயப்படுவதுண்டோ?