பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

பழமொழி நானூறு மூலமும் உரையும்



'பொறியும் தொடற்பாலார் கண்ணே தொடும்’ என்பது பழமொழி பொறி என்றது நல்லூழை.இதனை ஆகலூழ்' என்பர். 333 334. பகைவனிலும் வலிய துணை

வாய் முன்னதாகும்படி ஒருவன் ஆட்டைக் கட்டி இழுத் தாலும், அதன்பின்னே நாய் வருமானால், என்ன இழுத்தாலும் அது இழுப்பவன் பின்போகவே போகாது.ஆகையால், தன்னை வருத்தக்கூடிய ஒருவன் தன்மேல் எதிர்த்து வந்தால், தனக்குப் பின்னே பக்கபலமாக நின்று அவனை வருத்தும் வலிமையுள்ள வனைத்தானும் துணையாகப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.

தன்னலி கிற்பான் தலைவரின் தானவற்குப் பின்னலி வானைப் பெறல்வேண்டும்--என்னது உம் வாய்முன்னதாக வலிப்பினும் போகாதே நாய்ப்பின்ன தாகத் தகர். ஆட்டுக்கிடை நாயைப்போல நின்று உதவும் தக்க துணையைக் கொண்டவர்க்குப் பகைவராலே துன்பமில்லை என்பது கருத்து.'போகாதே நாய்ப்பின்னதாகத் தகர்'என்பது பழமொழி. பின்னே வரும் நாய்க்கு அஞ்சி ஆடு முன்னே செல்லாததுபோலப் பகையும் தன் பின்னேயுள்ள பகைக்கு அஞ்சி நம்மேல் வராது என்பது இதன் விளக்கமாகும். 334 335. தமக்குத் தாமே துன்பம் தேடார்

தம் தலை மிகவும் கிழிந்து, தம் காலும் இழந்து அக்கால்கள் நடையைத் தாரா என்றவோர் நிலைமைக்கும் உட்பட்டு, முடத் துடனே, முடவன் என்ற அளவிலே பேரும் பிறிதாகப் பெறுதலான காரணத்தால், ஒருவர் கேணியிலே நீர் குறைவாயிருப்பதைக் கண்டால், அதன்பின்னும் அதனுள்ளே பாய்ந்து தமக்குக் கேடு தேடிக்கொள்ள எவரும் துணியமாட்டார்கள் அல்லவோ?

கடுப்பத் தலைக்கீறிக் காலும் இழந்து நடைத்தாரா என்பது உம் பட்டு--முடத்தோடு பேர்பிறி தாகப் பெறுதலால், போகாரே நீர்குறி தாகப் புகல்.

தமக்குத் துன்பம் வருமென்று தெளிவாகத் தெரியும் ஒன்றிலே எவரும் தலையிடவே மாட்டார்கள் என்பது கருத்து. போகாரே நீர்குறி தாகப் புகல்’ என்பது பழமொழி, நீராழம்