பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

பழமொழி நானூறு மூலமும் உரையும்



338. பழம் பெருமையால் வாழ்தல் -

போரிலே ஈடுபடும் துணிவில்லாமல் ஓடிவந்துவிட்டு, பழித்தற்குரிய அந்தச் செயல் மிகுதியாகப் பலராலும் அறியவும் பட்டவரான கோழைகள், எம் முன்னோர் முன் காலத்திலே இன்ன பெருமையுடையவராயிற்றே? அதனை இனி எவரிடத் திலே சென்று சொல்லுவோம்’ என்று கூறித்தம் முன்னோரின் புகழிலே மறைந்து கொண்டு சோறு பெற்று உயிர்வாழ்தல் வெறுக்கத் தக்கதாகும். அது, கணவன் மீது பற்றில்லாது அவனால் வெறுக்கப்பட்ட ஒருத்தி, தன் மகனின் மறைவிலே கணவனிடம் சோறுபெற்று உண்டு வாழ்ந்து வருவது போன்ற தாகும். - -

அமர்விலக்கி ஆற்ற அறியவும் பட்டார் எமர்மேலை இன்னரால் யார்க்குரைத்தும், என்று தமர்மறையால் கூழுண்டு சேறல் அதுவே மகன்மறையத் தாய்வாழு மாறு.

மகனுக்கு என்று கணவனிடம் பொருள்பெற்று அவனால் வெறுக்கப்பட்ட மனைவி வாழ்வது போன்றதே, பேராண்மை யற்றவன் பழம்பெருமை பேசி வாழ்வதும் என்பது கருத்து. ‘மகன்மறையத் தாய்வாழு மாறு என்பது பழமொழி. 338 339. நம்பிக்கைத் துரோகம் -

பசுமையான தொடியினை அணிந்திருப்பவளே! நமக்கு ஒரு தளர்ச்சி வந்த காலத்திலே சேமநிதியாவார் இவர்'என்று கருதிப் போற்றப்பட்டவரான ஒருவர், அப்படி ஓர் இடர் வந்த காலத் திலே ஒன்றிற்கும் உதவாதவராக, ஏதாவதொரு அச்சத்தை மேலிட்டுக் காட்டி மனம் மாறினார் என்றால் அதுவே, மச்சின் மேல் ஒருவரை ஏற்றிவிட்டு ஏணியை வாங்கி விடும் செயலோடு ஒத்ததாகும். - . .

எய்ப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர் உற்றுழி ஒன்றுக்கு உதவலார், பைந்தொடீஇ' அச்சிடை இட்டுத் திரியின், அதுவன்றோ மச்சேற்றி ஏணி களைவு. - உதவுவார் என்ற நம்பிக்கையைஏற்படுத்திவிட்டு ஆபத்தில் உதவாதவர் நம்பிக்கை துரோகிகள் என்பது கருத்து.'ஏறவிட்டு ஏணியை வாங்கினாற்போல்"எனவும் இப்பழமொழிவழங்கும். ‘மச்சேற்றி ஏணி களைவு' என்பது பழமொழி. 339