பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

பழமொழி நானூறு மூலமும் உரையும்



எல்லாருக்கும் நல்லவர்போலக் காட்டி வெளிப்பட்டு வருப வரான, மயில்போன்ற கள்வரையும் உடையதுதான் இந்த உலகம். .

துயிலும் பொழுதத்து உடைஆண்மேற் கொண்டு வெயில்விரி ப்ோழ்தின் வெளிப்பட்டா ராகி 该 அயில்போலுங் கண்ணாய்! அடைந்தார்போல் காட்டி மயில்போலும் கள்வர் உடைத்து. கொடிய பாம்பைப்பற்றி விழுங்கிவிட்டுச் சாதுவாகத் தோன்றும் மயிலைப்போல, கொடிய செயலைச் செய்து விட்டு நல்லவராக நடித்தலால், 'மயில்போலும் கள்வர்” என்றார். அத்தகையவர் உறவை வெறுத்து ஒதுக்கவேண்டுமென்பது கருத்து. ‘மயில்போலும் கள்வர் உடைத்து’ என்பது பழமொழி. 344 343. பணத்தாசை கொண்ட படித்தவர்

கன்றினையுடைய பசுவானது வரப்புகளிலே மலர்ந்துள்ள பூக்களை மேய்கின்ற வளவிய நீர்வளம் உடைய ஊரனே! மரத்தை வெட்ட உதவுகின்ற கருவிகள் மயிரைக் கழிக்க உதவுவன அல்ல. அதுபோலவே, செல்வத்தைப் பெற்றாலும், பிறர்க்குக் கொடுத்து உதவாமலும், தாமும் அனுபவியாமலும், படித்தவர்களுங்கூடப் பற்று உடையவர்களாக இறுகப் பற்றிக் கொண்டிருப்பார்கள். .

பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார் கற்றாரும் பற்றி இறுகுபவால்--கற்றா வரம்பிடைப் பூமேயும் வண்புனல் ஊர! மரங்குறைப்ப மண்ணா மயிர். கருவி என்ற அளவிலே ஒன்றாயினும்மரம்வெட்டும் கருவி மயிர் சிரைக்க உதவாது. அதுபோலப் படிப்பு என்ற அளவிலே ஒன்றாயினும், பொருளின் பயனை உணர்ந்து அறம் செய்யாத வரின் படிப்பு நல்ல படிப்பாகாது என்பது கருத்து. மரங் குறைப்ப மண்ணா மயிர் என்பது பழமொழி. 343 344. அரசாணையும் பிறர் ஆணையும்

புன்ன்ை மரங்களையுடைய கானற் சோலை யினிடத்தேயும் நீர் வந்து பரவுதலான, மிக்க அலைகடலின் தண் சேர்ப்பவனே! ஒரு பெரிய மரத்தின் அடியிலே மற்றொரு மரத்தை நட்டால் அது வளரமாட்டாது அழியும். அதனாலே மன்னவன் ஆணை செலுத்தும் இடத்திலே, ம்ற்றவர்கள் அதற்கு