பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x

புலியூர்க் கேசிகன் - t 5

மோ? ஆகவே ஆகாதுவெண்மேகங்கள் தங்கும்சோலைகளையு டைய மலைநாடனே எப்படிப்பட்டதுணைகளை உடையவர் களானாலும், உள்ளத்திலே அஞ்சி நடுங் கும் கோழைகளாக இருப்பவர்களுக்குப் பாதுகாக்கும் அரண் என்பது எதுவுமே கிடையாது என்று அறிவாயாக

வன்சார்பு உடையர் எனினும் வலிபெய்து தஞ்சார்பு இலாதாரைத் தேசூன்றல் ஆகுமோ மஞ்சுசூழ் சோலை மலைநாட! யார்க்கானும், அஞ்சவார்க் கில்லை அரண். 'வலிமை என்பது ஒருவர்க்குத் தம்பால் அமைவதே யல்லாமல், பிறர் ஊட்டலாலும், அரண் முதலிய பாதுகாப்பா லும், துணையாலும் அமைவதன்று 'அஞ்சுவார்க்கு இல்லை அரண் என்பது பழமொழி. 7 8. குடிப் பெருமையின் சிறப்பு

தாயினாலே யானாலும், தந்தையினாலே யானாலும், யாதாயினும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தம் வாயினாலேயே தம்மைப் பெருமையாகக் கூறும் தற்புகழ்ச்சி யாளர்களைப் பிறரும் புகழ்தல்,புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவதன்று, என்றாலும், அது அடுப்பின் ஒரத்திலே முடங்கிக் கிடக்கும் நாயினைப் புலியாகும் என்று சொல்வது போலப் பொருத்தமில்லாத பொய்ப் புகழ்ச்சியேயாகும். - தாயானும் தந்தையா லானும் மிகவின்றி வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல், நோயின்று எனினும், அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்.

குடிப்பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினர் ஆதல் இல்லை. அவருடைய போலித் தோற்றங்கண்டு புகழ்வதெல் லாம், பொய்யான புகழ்ச்சியே அல்லாமல் உண்மைப் புகழ்ச்சி யாகாது. அடுப்பின் கடைமுடங்கும் நாயைப் புலியாம் எனல்’ என்பது பழமொழி. 8 9. மகனுக்குச் செய்யவேண்டியது

ஒரு தகப்பன் எந்த வகையிலே யானாலும், தன் மக்களைச் செம்மையான நெறியிலேயே மேம்பட்டு நிற்குமாறு அதற்குத் தகுதியானவற்றையே செய்தல் வேண்டும். தான் செய்த பாவை யே ஒரு சிற்பிக்குப் பின்னர் தெய்வமாவது போல, அப்படிச் செந்நெறியிலே மக்களை நிலையாக நிற்கச் செய்தால்,