பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

167



மேம்பட்டு இடும் கட்டளைகள் என்னவகையால் செய்யப் பெறுவனவாகும்? .

மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம் என்னவகையால் செயப் பெறுப?--புன்னைப் பரப்புநீர் தாவும் ப்டுகடல் தண்சேர்ப்ப மரத்தின்கீழ் ஆகா மரம். 'மன்னனின் ஆணையின்கீழ்ப் பிறவாணை ஓங்காது’ என்று அரசாணையின் சிறப்புச் சொல்லப்பட்டது. மரத்தின் கீழ் ஆகாமரம் என்பது பழமொழி * - 344 345. பரிபவரிடம் மறையார் - - அறுத்துச் செய்யப்பட்ட அழகிய சங்கு வளையல்களை உடையவளே! நோய் தீரவேண்டுமென விரும்புகிறவர்கள் அதனைத் தீர்க்கும் மருத்துவர்க்கு அந்நோயினை மறைக்க மாட்டார்கள். அதுபோலவே, மிகவும் தமக்காகப் பரிந்து தம் வருத்தத்தைத் தீர்ப்பார்கள்என எண்ணப்பட்டஒருவருக்குதாம் உற்ற குறைபாட்டைச் சென்று உரைப்பார்கள், அது நீங்க வேண்டுவார்.

தெற்றப் பரிந்தொருவர் தீர்ப்பர்எனப் பட்டார்க்கு, உற்ற குறையை உரைப்பதாம்--தெற்ற அறையார் அணிவளையாய் தீர்தல் உறுவார் மறையார் மருத்துவர்க்கு நோய்.

உற்ற குறையைத் தீர்க்கும் இரக்கசிந்தை உடையவரிடம் சென்று சொல்லுவதில் தவறில்லை என்பது கருத்து. பிறரிடம் சென்று உரைப்பது தவறு என்பதும் குறிப்பு. ‘மறையார் மருத்துவர்க்கு நோய் என்பது பழமொழி. தெற்ற தெளிவாக பரிந்து-இரக்கப்பட்டு, 345 346. தெளிவும் செயலும் -

தெளிவான அறிவினை உடையவரை அல்லாமல், திறமையில்லாத முற்றல் ஒருவனைத் தேடிப்பிடித்து, ஒரு செயலைச்செய்வதற்கு யாரும் நியமிக்கமாட்டார்கள்.ஒன்றைக் கற்று அறிந்து, அதன்கண் குற்றமற்று ஒருவன் விளங்கிய காலத்தும்கூட, அந்தக் கல்வியை மேலும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமென்ற நினைவுடன், அதன்பால் மெலிவுடையவனாக இருத்தலே அவனுக்கு நன்மையாகும்.