பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

பழமொழி நானூறு மூலமும் உரையும்



இருக்கும் நீண்டதோள்களையுடைய திருமாலுக்கே யானாலும், குற்றம் செய்தான் என்னும் பழிச்சொல்லானது என்றும் நீங்காததேயாகும்.ஆதலால், உயர்ந்தோர்களின்பால் தோன்றும குற்றமானது வெள்ளை மாட்டின் முதுகிலே இட்ட சூட்டைப் போல என்றும் ஒழியாது நிலைத்திருக்கும் என்று அறிவாயாக.

நிரைதொடி தாங்கிய நீடோள்மாற் கேயும் உரையொழியா வாகும் உயர்ந்தோர்கட்குற்றம் 'மரையா கன்றுட்டும் மலைநாட! மாயா,

நரையான் புறத்திட்ட சூடு.

காக்குங் கடவுளையே, குற்றம் இன்னின்ன காலத்து இன்னின்ன செய்தான் என்று எடுத்துப் பேசும் இயல்புடையது உலகம். பெரியோர் செய்த குற்றம் என்றும் நிலைபெறும் என்பதையே அது காட்டுமாதலால், அவர் குற்றமே இல்லாத வராக விளங்க வேண்டும் என்பது கருத்து. ‘மாயா நரையான் புறத்திட்ட குடு’ என்பது பழமொழி நரையான் - வெள்ளை நிறமாடு. - - - 351 352. மீந்துள்ள செல்வம்

தான்காக்கும் காவலையும்கடந்து,விரைந்துசென்றுதான் மிகுத்துத் தொகுத்து வைத்திருக்கும் மிகுதியான செல்வத்தை அரசனானவன் வந்து கைப்பற்றினால், வைத்திருப்பவர் கொடுத்து உயிர் பிழையாமல் வேறு என்ன செய்வார்கள்? உலகப் பற்றுக்களையெல்லாம்துறந்தபற் பெரியவர்களுக்கேயா னாலும், அளவுகடந்த செல்வம் சேர்ந்திருந்தால், அதனால் வரும் துன்பத்திற்கு ஒரு பரிகாரமுமே இல்லையாகும். -

காப்பிகந்து ஓடிக் கழிபெருஞ் செல்வத்தைக் கோப்பெரியான் கொள்ளக் கொடுத்திரா தென்செய்வர்? நீத்த பெரியார்க்கே யாயினும் மிக்கவை மேவிற் பரிகாரம் இல்.

செல்வத்தை ஈந்தும் அநுபவித்தும் வாழாமல் காத்து வைத்தால், முடிவில் அதனால் துன்பமே வரும் என்பது கருத்து. ‘மிக்கவை மேவிற்பரிகாரம் இல்’ என்பது பழமொழி. 352 353. தீயோன் இகழ்தல்.

நல்லதல்லாத சபையினுள்ளே புகுந்து நாணங்கெட்டு வாழ்பவர்கள், நல்ல சபையிலே புகுந்திருந்து, பிறர் நா அடங்குமாறு, கல்வியால் அளவிறந்து மிக்கராக விளங்கும்