பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

171



ஒருவரின் அறிவை இகழ்ந்து கூறுதல், மிளகின் உளுவை உண்ணப்புகுவதனோடு ஒக்கும்.

அல்லவையுள் தோன்றி அலவலைத்து வாழ்பவர் நல்லவையுள் புக்கிருந்து நாவடங்கக் கல்வி அளவிறந்து மிக்கார் அறிவெள்ளக் கூறல் மிளகுளு வுண்பான் புகல்.

A.

மிளகின் புழுவை உண்பவன் சாவான் என்பர்.அதுபோல, அங்ங்னம் பழித்தவனும் அழிவான் என்பது குறிப்பு. 'மிளகுளு வுண்பான் புகல்.’ என்பது பழமொழி. 353 354. யானையும் முடவனும் -

கற்று வல்லவர்களான பெரியோரைச் சினங்கொள்ளச் செய்து கல்லாதவர்கள் சொற்களைக் கொழித்துக்கொண்டு மனவெழுச்சியுடன் எழுதல் எது போல்வ தென்றால் தானும் நடக்காத முடவன் ஒருவன், தன்னுடைய பிடிப்பை ஊணிக் கொண்டு சென்று, யானையோடு உறவாடுதலைப் போன்ற தாகும். - & கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்

சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல்-- எற்றெனின் தானும் நடவான் முடவன் பிடிப்பூணி யானையோ டாடல் உறவு.

முடவன் சென்று யானையோடு உறவாடினால், அதனால் கொல்லப்படுவான். அதுபோலக் கயவரும் அவமானம் அடைவார்கள் என்பது கருத்து.'முடவன் பிடிப்பூணி யானை யோடாடல் உறவு’ என்பது பழமொழி. 354 355. நல்வினையும் செல்வமும்

முன் பிறவிகளிலே பெரிதான நல்வினைக்கு உரிய செயல்களைத் தடையின்றிச் செய்யாதவர்கள், பின்வரும் பிறப்பிலே பெரியசெல்வம்பெறுதல் என்பது ஆகக்கூடியதோ? பிறருடைய முதலோடு மாறுபட்டு முயன்று பொருள் ஈட்டு தலைச் செய்ய எண்ணியபோது, அவன் முயற்சிகள் என்ன வாகும்? தன் சொந்தமுதல் இல்லாத ஒருவனுக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லை. - -

முற்பெரிய நல்வினை முட்டின்றிச் செய்யாதார், பிற்பெரிய செல்வம் பெறலாமோ?--வைப்போடு