பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

பழமொழி நானூறு மூலமும் உரையும்



இகலிப் பொருள் செய்ய எண்ணியக்கால் என்னாம்? முதலிலார்க்கு ஊதியம் இல்.

முற்பிறப்பிலே நல்வினை செய்தவர்க்கே பிற்பிறப்பிலே செல்வம் வந்து வாய்க்குமென்பது கருத்து.முன்செய் நல்வினை முதலாகவும் பின்வரும் செல்வம் அதற்கான ஊதியமாகவும் கொள்க.“முதலிலார்க்கு ஊதியம் இல் என்பது பழமொழி,355 356. அருளற்றவர் அறவாழ்வு - - அறநெறிக்கு அடிப்படையான பண்பு பிற உயிர்களின் மீது அருள் உடையவராய் இருப்பதேயாகும். இதனையே, தாம் நடப்பதற்கு உரிய ஒழுக்கமாகக் கண்டு, முழுவதும் நல்லொழுக் கத்தின் சிறப்பை அறிந்தவர்கள் எவரோ, அவரே வாழ்வுப் பயனுக்குரிய முதலினை நன்றாக அறிந்தவர்களாவார்கள். மிகத்தெளிவாக விளங்கும் அந்த முதலைக் கைவிட்டுவிட்டு, அஃது ஒழிந்தவராக வாழ்பவர்களின் பாதுகாப்பற்ற ஒழுக்க மானது பயனற்றது. அது, கையிற் கிடைத்த முயலைப் போக விட்டுவிட்டுக்காக்கையைத்தின்பதுபோன்றதாகும்." அற்றாக நோக்கி அறத்திற்கு அருளுடைமை முற்ற அறிந்தார்முதலறிந்தார்.--தெற்ற முதல்விட் டஃதொழித்தோர் ஓம்பா ஒழுக்கம், முயல்விட்டுக் காக்கை தினல். முயல் காக்கையினும் சிறந்தது; அதுபோல நல்லொழுக்கம் தவறொழுக்கத்தினும் சிறந்த பயன் தருவது; அதனையே மேற்கொள்ளல் சிறப்புத் தரும் என்பது கருத்து.'முயல்விட்டுக் காக்கை தினல்’ என்பது பழமொழி. 356 357. ஏவலரும் காவலரும்

அரசனே தனக்கு வேண்டியவனாக, அவனுக்கு இசைய நடந்து வருபவர்கள், மற்று அவனுடைய ஏவிய செயலைச் செய்திருந்தவர்களிடத்தே தமக்கு ஒர் உதவியைச் செய்யுமாறு சென்று அணுகுதல் மதியீனமாகும். அது, பசுவின் அரவணைப் பிலே நின்ற அதன் கன்றானது, தன் பசிதீரப் பாலுண்ணும்மடி அத் தாயிடத்தே இருப்பவும், அதனைச் சுவைத்து உண்ணாது, தன் தாயின் அணலைச் சுவைத்து நிற்பது போன்றதாகும்.

காவலனை ஆக வழிபட்டார் மற்றவன் ஏவல் வினைசெய் திருந்தார்க்கு உதவடுத்தல் ஆவணைய நின்றதன் கன்று முலையிருப்பத் தாயணல் தான்சுவைத் தற்று.