பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

புலியூர்க் கேசிகன் - 175.

உடலிலே வளமும், பொருள் வளமும் இருக்கும்வரை அதன் காரணமாகச் சிற்றின்பத்திலே மூழ்கி இருத்தலன்றிப் பேரின் பத்தை நாடாத அறிவற்றாரைப் பற்றிக் கூறியது இது. “முள்ளித் தேன் உண்ணு மவர் என்பது பழமொழி. முள்ளிமுட்செடி ... • - 361 362. பகையால் பகைகளைதல்

ஆராய்ந்து அறியும் அறிவுத்திறன் உடையவர்,தம்முடைய பகைவருக்கு எதிராக அவருடனிருந்து அவரை அழிக்கும் உட்பகையாயினாரை எளிதிலே பெறுவார்கள் என்பது உறுதியேயாகும். கள்வெறியினால் பிதற்றுவான் ஒருவ்னை, மீண்டும் அந்தக் கள்ளைக்குடிப்பிப்பதனாலே மயங்கிப்பேச்சி ழக்கச் செய்வதனையும் காணலாம். அப்படிச் செய்வதுதான், காலிலே வைத்தமுள்ளினை மற்றொரு முள்ளின் உதவியினாலே எடுத்துவிடுவதுபோன்றதாகும். -

தெள்ளி யுணரும் திறனுடையார் தம்பகைக் குள்வாழ் பகையைப் பெறுதல் உறுதியே கள்ளினால் கள்ளறுத்தல் காண்டும்; அதுவன்றோ, முள்ளினால் முட்களையு மாறு. - தீயவர் ஒருவரை அழித்தற்கு மற்றொரு தீயவரை மிகவும் தந்திரமாகப் பயன்படுத்த வேண்டும் என்பது கருத்து. “முள்ளினால் முட்களையு மாறு’ என்பது பழமொழி. 362 363. முறைமையும் காலமும்!

முன்னாளிலே பசுவின் கன்றின்மேல் தேரைச் செலுத்திக் கொன்ற தன் மகனை, அவன் தந்தையான மனுநீதிச் சோழனே தேரைச் செலுத்திக்கொன்று நீதி செலுத்தினான்.அச்செயலை மிகவும் இரகசியமாகப் பாதுகாத்து அறமுரைக்கும் சான் றோர்களே கடமையை மறந்த போதும், பல நாட்கள் கழிந்து போனதன் பின்னாலும் அவன் முறைமையைப் பேணினான். இதனால் நீதிக்கு இளமை மூப்பு என்பது எதுவும் இல்லை என்று அறிதல் வேண்டும். - . . .

சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக் காலை கழிந்ததன் பின்றையும்--மேலைக் கறவைக்கண் றுர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் முறைமைக்கு மூப்பிளமை இல். - இளமை, மூப்பு என்பது குற்றம் நடந்த உடனே என்பதையும், காலம் கடந்தபின் என்பதையும் குறிக்கும்.நீதிக்கு