பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பழமொழி நானூறு மூலமும் ຂ-ເທru໖

அம்மக்கள் பிற்காலத்தில் தந்தையாலும்போற்றப்படும் உயர்ந்த, பெருநிலையினை அடைவார்கள்.

எந்நெறி யானும் இறைவன்றன் மக்களைச்செந்நெறிமேல் நிற்பச் செயல்வேண்டும்--

. அந்நெறி மான்சேர்ந்த நோக்கினாய்! ஆங்க, அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு.

மக்களைச் செந்நெறிமேற் செல்லுதலில் தகுதியுடைய வராக்குதல்தான் ஒரு தந்தையின் கடமை. அணங்கு - தெய்வம். பாவை-செதுக்கிய சிலை அணங்காகும் தான்செய்த பாவை தனக்கு என்பது இதிலுள்ள பழமொழி.'இறைவன் என்றதால், ஒர் அரசன் தன் குடிமக்களைச் செந்நெறிமேல் நிற்கச் செய்ய வேண்டும் என்பதும் இதனால் அறியப்படும். 9 10. முகஸ்துதிக்கு மகிழ வேண்டாம்

மூங்கில்கள் அடர்ந்திருக்கும் மலைகளுக்கு உரியவனே! தம்மவரேயானாலும், ஒருவர் தம்மைப் புகழ்ந்து பேசுகின்ற - சமயத்திலே, அந்த முகஸ்துதிக்கு மனமகிழலாகாது. அப்படிப் பேசுதலை உடனேயே தடுத்துவிடவேண்டும். தம்முடையனவே என்றாலும்,பொருத்தமில்லாத ஆபரணங்களை எவரும் அணிவ தில்லை அல்லவா?

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் அமராது அதனை அகற்றலே வேண்டும்.

அமையாரும் வெற்ப அணியாரே தம்மைத்

தமவேனும் கொள்ளாக் கலம். -

முகஸ்தியை விரும்பினால், உள்ளத்து அகந்தையே நிறையும். அதனால், அது தம்மவராலே சொல்லப்பட்டாலும் தம் நல்ல ஒழுக்கத்திற்கு ஊறு செய்வதினால் ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று என்பதாம். அணியாரே, தம்மைத் தமவேனும் கொள்ளாக்கலம் என்பது பழமொழி.கொள்ளாக் கலம்-பொருந்தாத நகைகள். 10

11. அறிவு ஆடை போன்றது!

அறிவினாலே வந்த பெருமைகளே பெருமைகளாகும். அவை ஒன்றும் இல்லாத ஒருவன், பிற செல்வங்களினாலே பெருமை உடையவனாதல் எங்ங்னமாகும்; பொலிவுபெறச் செய்தலையுடைய இரத்தினாபரணமும்,பொன்னாபரணமும், சந்தனமும், மாலையும் ஆகிய இவைபோன்ற அணி வகைகள்