பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

179



இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும் தம்மைப் பரியார் தமரா யடைந்தவரின்

செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?

மைம்மைப்பின் நன்று குருடு.

உறவினர்போலக் காட்டி உட்பகை கொண்டு அடுத்துக் கெடுப்பவர்களைக் காட்டினும், பகைவரே எவ்வளவோ மேலானவர் என்பது கருத்து மைம்மைப்பின் நன்று குருடு’ என்பது பழமொழி. - . . . . 370 371. சிறியவர் செல்வம்

தேன் மிகுந்த பூ மாலையினையும், மாட்சிமையுடைய அணிகலன்களையும் அணிந்தவளே! ஆராய்வோமானால் மோரினைக்காட்டினும் பழைய நெய் தீமை செய்வதில்லை.அது போலவே, சிறியவர்கள் அடைந்த செல்வத்தினைக்காட்டினும், மாட்சியுடைய பெரியவர்கள் அடைந்த வறுமையே நன்றாக விருக்கும். - • * சிறியவர் எய்திய செல்வத்தின் மாணப் பெரியவர்.நல்குரவு நன்றே.--தெரியின் மதுமயங்கு பூங்கோதை மாணிழாய்! மோரின் முதுநெய் தீதாகலோ இல். y மோர் பழையதானால் உதவாது நெய் பழையதாயினும் கெடாது; அதுபோலச் சிறியவர் செல்வரானாலும் குணம் கெட்டவர் ஆவர்; பெரியவர் அஃதற்றாலும் சிறந்த குணம் உடைந்தவராகவே இருப்பர் என்பது கருத்து. மோரின் முது நெய் தீதாகலோ இல் என்பது பழமொழி. முதுநெய்-பழைய நெய். - . 371 372. செயலைத் திறமுடன் செய்தல் - தான் செய்வதற்குத் தனக்குள்ள திறமைகளையும் வசதி களையும் ஆராய்ந்து, தனக்கு அந்த வேலையிலே துணையாக அமைப்பவர்களையும் அப்படியே ஆராய்ந்து, அப்படிச் செய்வதனால் அதனின்றும் வருகிற பயனையும் ஆராய்ந்து கொண்ட பின்னரே, தாம் செய்வதற்கான செயல்களைச் செய்வார்கள் அறிவுடையோர்.அப்படி அல்லாமல், யாதானும் ஒன்றைக் கருதிக் கொண்டு, யாதானும் ஒரு காரியத்தைச் செய்தவிடத்து, அந்தச் செயலும் ஏதோவொன்றாக முடிந்து போமே அல்லாமல், முறையாக முடிந்து பயன்தருவதில்லை.