பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

181



சொற்சோர்வு படுதல் என்பது பொதுவாக எவருக்கும் இயல்பே.அதனால், இழிகுடியினர் பேச்சுச் சோர்வுபடுதலுக்கு வருந்த வேண்டாம் என்பது கருத்து. 'மற்றியாரானும் சொற்சோரா தாரோ இல் என்பது பழமொழி இற்பாலார் அல்லார் - இழிந்த குடியினர்; இவர் சொற்சோர்வுபட்ல் இயல்பே என்பதுமாம். . 374 375. இன்பமும் சினமும் - -

இறையுருவத்திற்குப் பக்தியுடன் நெய்முழுக்கு செய்வார் சிலர். அப்படிச் செய்தவர், பின் ஒரு துன்பம் வந்தால், இறைவனையே அவன், இவன் என்று சொல்லி இகழ்ந்து பேசித் தாம் முழுக்காட்டிய நெய்யை நக்கி எடுப்பார்களோ? மாட் டார்கள். அது தம் முன்னை வினையின் துன்பம் என்றே கருதி அமைவார்கள்.அதுபோலவே, உறவினன் என்று இருநாழிநெல் கொடுத்தவன்,பின்னர் சென்றபொழுது எமனாகவந்து உயிரை வாங்குகிறாயே?’ என்று கோபித்துக் கொண்ட்ாலும் பெறக் கருதிச் சென்றவன் அவனைக் கோபிக்கமாட்டான்.

தமனென்று இருநாழி ஈத்தவன் அல்லால்

நமனென்று காயினும் தான்காயான் மன்னே! அவனிவன் என்றுரைத்து எள்ளி, மற்றியாே நமநெய்யை நக்கு பவர்! -

ஒருமுறை உதவினவன் தொடர்ந்து உதவுகிறவனாக இல்லையே எனக் கோபிப்பது தவறு என்பது கருத்து. யாரே நம நெய்யை நக்குபவர் என்பது பழமொழி.'நம நெய் என்பது கோயிலில்தேவவுருவுக்கு முழுக்காட்டியநெய். 375 376. வளர்த்தவரை அழிக்காமை

பெண்ணின் இனிமையைத் தன்பால் கொண்டு விளங்கு கின்ற இனிய பேச்சினையுடையவளே! மூங்கில் போன்று வனப்புடன் அமைந்த தோள்களையும் உடையவளே! தம்மு டைய கன்று குற்றஞ் செய்ததென்று, அது பாலின்றிச் செத்துப் போகுமாறுப்சுவின் மடியை ஒட்டக்கறந்துவிடுபவர் யாராவது இருக்கிறார்களோ? இல்லை என்பதுபோலவே, சிநேகத்தால் ஒன்றுபட்டுத்தம்முடைய உதவியாலே நிலைநிறுத்தப்பட்டவர் களை, அவர்கள்மீது கண்கண்ட குற்றம் ஒன்று உளதானாலும், அதற்காக அவர்களைக்கோபித்து யாரும் ஒழிக்கமாட்டார்கள்.

நண்பொன்றித் தம்மாலே நாட்டப்பட் டார்களைக் கண்கண்ட குற்றம் உளவெனினும் காய்ந்தீயார்;

v,