பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

பழமொழி நானூறு மூலமும் உரையும்



பண்கொண்ட தீஞ்சொல் பணைத்தோளாய்! யாருளரோ தங்கன்று சாக் கறப்பார்.

தம் கன்று சாவதனால் தமக்கே வரும் நட்டம் பெரிதாகும்; அதுபோலத் தம்மால் நாட்டப்பட்டவரை ஒழித்தால் தமக்கே பழி அதிகமாகும் என்பது கருத்து."யாருளரோதங்கன்று சாக் கறப்பார் என்பது பழமொழி.இந்நாளில் தங்கன்று சாகுமாறு தாய்மடியை சுறக்கறந்து விடுவாரும் காணப்பெறுகின்றனர்.376 377. துறவியரும் உலக பாசமும்

முழங்கும்.அருவிகள் தினைப்புனங்களினிடத்தேவீழ்ந்து, கொண்டிருக்கும் மலைநாடனே தம்முடைய சிறப்புடையதான சுற்றத்தினரையும், தாம் ஈட்டிய பொருள்களையும் கைவிட்டுத் துறந்தவர்கள், பின்னும் உலகியலில் பற்று உடையவர்களா யிருப்பது என்ன காரணமோ? அப்படியிருப்பதுதான் யானை போய் வால் போகாதவாறு என்று சொல்லப்படும். &

சிறந்ததம் சுற்றமும் செய்பொருளும் நீக்கித் துறந்தார் தொடர்ப்பாடு எவன்கொல்--கறங்கருவி ஏனல்வாய் வீழும் மலைநாட! அஃதன்றோ யானைபோய் வால்போகா வாறு. 'யானை போயும் வால்போகாதவாறு’ என்பது பழமொழி விடப் பெரிய பற்றுக்கள் சுற்றமும், பொருளும்; அவற்றையும் விட்டவர் உடலிச்சையான சில பற்றுக்களைக் கொண்டிருப்பதன்நிலைமையை நினைத்துக்கூறப்பட்டது.377 378. அறிவால் அறிஞரைக் கொள்ளுதல் - -

மானின் கண்களைப் போன்ற கண்களை உடையவளே! வீரங் கெழுமிய பெருவேந்தர்கள் யானையைக் கொண்டே யானைகளைக்கட்டிப்பிடித்துக்கொள்வார்கள்.அதுபோலவே தாம் உள்ளத்திலே நம்மை உடையவர்களான அறிவுடை யோர்கள், தமது நலத்தை ஒத்த அறிவாளிகளையே தம்முடன் சேர்த்துக்கொள்வதுமாகும். - ஆணம் உடைய அறிவினார் தந்நலம் மானும் அறிவினவரைத் தலைப்படுத்தல், மானமர் கண்ணாய்! மறங்கெழு மாமன்னர் யானையால் யானையாத் தற்று. அறிவால் அறிவாளரை வசப்படுத்த முடியுமேயன்றி அறிவற்றோரால் அறிவாளரை வசப்படுத்த முடியாது என்பது கருத்து.'யானையால் யானையாத்தற்று”என்பது பழமொழி,378