பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

183



379. வரிவசூலிக்கும் முறை - -

செங்கோல் முறைமையினின்றும் கெடுதல் இல்லாத அழகிய குளிர்ந்ததாரினை அணிபவரான மன்னர்கள், தம் அடி நிழலிலே வாழும் குடிமக்களை வருத்தாது, வரி வசூலித்தலும் போலாகாமல், காலமறிந்து பக்குவமாக வசூலித்துக் கொள்க. அதுதான், வண்டினம் பூவைச் சிதைக்காமல் அதன் பாலுள்ள தேனைக் குடிப்பதனோடுபொருந்துவதாகும்.

பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர் . அருத்தம் அடிநிழலாரை-வருத்தாது கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ வண்டுதா துண்டு விடல். - குடிம்க்களை வருத்தாமல்வரி வாங்கவேண்டிய அரசியல் நெறி கூறப்பட்டது. வருத்தாது கொண்டாரும் போலாதே கோடல்’ என்பது வருத்தம் உண்டாக்காமலும், அதிக வரி கொண்டதாக அவருக்குத் தோன்றாமலும், தந்திரமாகக் கொள்ளல் வேண்டும் என்பது கருத்து. வண்டு தாதுண்டு விடல்” என்பது பழமொழி. வண்டு மலரைச் சிதைக்காது தேனுண்பது இங்கே நல்ல உவமையாகும். 379 380. வருத்தம் வாழ்க்கைக்கு உறுதி .

பிறருக்கு உபகாரம் செய்து, வரும் விருந்தினரையும் பாது காத்து, வெம்மையான போரினிடத்தே வாளாண்மையிலும் வலிமையுடையவர்களாக விளங்கி, தாளாண்மை என்னும் முயற்சியைக் குறைவிக்கும் சோம்பலும் இல்லாதவர் களாக, இந்த வாழ்விலேயே வருந்தியும் ஈடுபடுதல் சிறந்தது. அப்படி வருந்தா தார் வாழ்க்கை என்றும் திருந்துதல் இல்லை என்பது உண்மையாகும். :

வேளாண்மை செய்து விருந்தோம்பி வெஞ்சமத்து வாளாண்மையாலும் வலியராய்த்-தாளாண்மை தாழ்க்கு மடிகோள் இலராய் வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று. சோம்பலின்றி, வாழ்க்கை முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பது கருத்து வருந்தாதார் வாழ்க்கை திருந்துதல் இன்று' என்பது பழமொழி. தாழ்க்கும் மடி - தாழ்விக்கும் சோம்பல். கோள்-ஆட்கொள்ளுதல். - 380