பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

பழமொழி நானூறு மூலமும் உரையும்



381. வலிமையின் வயணம்

புலியுடனே பகை கொண்டு போரிடும் யானைகளை யுடைய பூங் குன்ற நாடனே தம்மினும் வலிமை யுடையவர் களைக் கண்டால் வாயால் ஒன்றும் பேசாது ஊமையாகி விடுவர்; தம்மினும் வலிமையால் மெலியவரைக் கண்டால், அடர்த்துச் செல்லும் மேம்பாடு காட்டுவர். இந்தப் பண்பு உடைமையானது தேவையில்லாத காலத்திலே, வலிமையுடை தாயிருப்பதுபோன்றதாகும். -

வலியாரைக் கண்டக்கால் வ்ாய்வாளாராகி மெலியாரை மீதூரும் மேன்மை யுடைமை, புலிகலாம் கொள்யானைப் பூங்குன்ற நாட! வலியலாந் தாய்க்கு வலித்து.

அரசன் தன்னிடத்தே வலிமையில்லாத காலத்திலே பகை வரிடம் அநுசரிக்க வேண்டிய முறைமை கூறப்பட்டது. "வலியலாந் தாய்க்கு வலித்து’ என்பது பழமொழி.தாயம்-சமயம் வாய்ப்புக் காலம். வலியலாத்தாயம் - வலிமையற்ற உறவும் ஆகும். 381 382. வீண் பேச்சாளர்கள் -

கள்ளுண்டு தள்ளாடி வருகின்ற குடியர்களைப் போல, மரக்கலங்கள் ஆடி அசைந்து வந்துகொண்டிருக்கும் கடல் நாட்டவனே! காற்றைப் பிடித்துத் தோளிலே போட்டுக் கொள் ளக்கூடியவர்கள் யாருமே இல்லை.அதுபோலவே பொருந்தாத வைகளைப் பேசித் திரிகின்ற குணங்கெட்டமாக்களை, நாவினி டத்துஅடக்கிப்பேசாதிருக்கச்செய்வதும்மிகவும்அருமையாகும

கோவாத சொல்லும் குணனிலர மாக்களை

நாவா யடக்கல் அரிதாகும்--நாவாய்

களிகள்போல் தூங்கும் கடல்சேர்ப்ப வாங்கி

வளித்தோட் கிடுவாரோ இல்.

வீண்பேச்சுப்பேசுவதே இயல்பாக உடையவரின் நாவை அடக்குவதே மிகவும் கடினமான செயலென்பது கருத்து. ‘வாங்கி வளித்தோட்கிடுவாரே இல் என்பது பழமொழி. 382 383. செய்யாததற்குப் பரிசு -

போரிலே மிகவும் சிறந்த செயலைச் செய்தவர்கள் பொறுமையுடன் நிற்கவும், ஏதும் செய்தற்கு இயலாதிருந்த வர்கள் பலப்பல சொல்லி வேந்தனை நொந்து கொள்வது பயனற்றதாகும்.அதுசேற்றிலே தவறாமல்வண்டியை இழுத்துச்