பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

185



செல்லும் ஆற்றலுடையதாகக் கருதிய எருதானது, படுத்துக் கொண்டு எழாமற்போய்ச்சாவது போன்றதாகும். -

ஆற்ற வினைசெய்தார்நிற்பப் பலவுரைத்து ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள் வழா அமைக் காத்தோம்பி வாங்கும் எருதாங்கு

எழா அமைச் சாக்கா டெழல்.

போரிலே வீரஞ்செய்தவர்க்குப் பரிசு வழங்குவது முறை. அவரே பேசாது நிற்க ஏதுஞ் செய்யாதவன் அரசன் பரிசு தராததற்கு நொந்து கொள்வது தவறு என்பது கருத்து. ‘வாங்கும் எருதாங்கு எழா அமைச் சாக்காடெழல்’ என்பது பழமொழி. - - 383 384. குதிரையும் வள்ளலும் -

பெரிதான சிறந்த குதிரையானது தான் மிகவும் வாடி இருந்த காலத்திலும் சேணமிட்டவுடன், அந்த வாட்டத்தை விட்டு விரைந்து செல்வதாகிவிடும். அதுபோலவே அறைகூவி அழைத்துக் கொடுப்பதற்கு ஏற்ற அளவிற் பெருஞ்செல்வம் இல்லையென்றாலும், தம்மைச்சேர்ந்தவர்களுக்குக் கொடுத்துப் பழகிய கொடையாளரே என்றும் முன்வந்து அவருடைய துன்பத்தைத்துடைப்பார்கள்.

கூஉய் கொடுப்பதொன்றில்லெனினும் சார்ந்தார்க்குத் தூஉய்ப் பயின்றாரே துன்பந் துடைக்கிற்பார்; வாய்ப்பத்தான் வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும்.

குடிப்பிறப்பின் தகுதி வறுமைக் காலத்தும் உயர்வுடை யாரிடத்தினின்றும் மாறாது என்பது கருத்து. வாடியக் கண்ணும் பெருங்குதிரை யாப்புள் வேறாகி விடும்’ என்பது பழமொழி. - 385, இரப்பவரை வருத்துதல்

மிகவும் வறுமைப்பட்டு, அதன் துன்பத்தைப் பொறுக்க முடியாது போயின் ஒருவர், அவருடைய நிலைமையை உணரு மாறு சொன்னதற்குப் பின்னரும், அவருக்கு நல்ல செய்கை செய்பவர்போலக் காட்டி முடிவிலே அவருடைய ஆர்வமெல் லாம் கெட்டு அழிய வலிமையான செயலைச் செய்தல் மிகவும் கொடுமையாகும். அதுவே, பசுவின் வாயிலே புல்லைக் கொடுத்து அதனை உண்ணவிடாது எடுத்து அதன் கழுத்திலே கட்டிவிடுவதாகும.