பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

187



விண்டொரீஇ மாற்றி விடுதல், அதுவன்றோ விண்டற்கு விண்டல மருந்து.

நண்பராகப் பலநாட்பழகியும்கூட, ஆபத்துக்காலத்திலே உதவாமல், அறியாதவர்போல நடந்துகொள்ளும் நட்புத் திண்மையற்றவர்களின் நட்பைக் கைவிட்டு விடுதலே சிறப்பு என்பது கருத்து. விண்டற்கு விண்டல மருந்து என்பது பழமொழி. - 387 388. புகழுடையவரைப் பழித்தல்

தசை நிரந்து எழுச்சியுடையதாக அமைந்து மூங்கில் போலத் திரட்சியும் பெற்று விளங்கு தோள்களையும், வேல் போன்ற கண்களையும் உடையவளே! வானத்திலே செல்லுகின்ற சூரியனைக் கையினாலே மறைத்துவிடக் கூடியவர் எவருமே இல்லை. அதுபோலவே எங்கும் பரவிய பெரும் ஆற்றலுடைய வரை,அவர்மேற் சிலபல பழிச்சொற்களைச் சுமத்தி, அவர் புகழ் வெளிப்படாது மறைத்துவைத்தல் என்பதும் எவராலும் முடியக்கூடிய செயலாகுமோ? -

பரந்த திறலாரைப் பாசிமேல் இட்டுக்

கரந்து மறைக்கலும் ஆமோ?--நிரந்தெழுந்து

வேயிற் றிரண்டதோள் வேற்கண்ணாய்! விண்ணியங்கும்

ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல். *

பொறாமையால் புகழுடையவரைப்பழித்துப் பேசுபவர் சில சிறுமதியாளர்கள்.அவர்கள் செயல்தவறு என்பது கருத்து 'விண்ணியங்கும் ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல் என்பது பழமொழி. 388 389. முதல் இன்றி வினையில்லை

அழகு உடையவளே! நாணம் என்ற குணம் அமையாது

போனால் அவளிடம் பெண்மை என்ற பண்பும் உளதாகாது. சுவை மிகுந்த உணவு இல்லாமற்போனால் உயிர் வாழ்க்கை என்பது உளதாகாது. அவைபோல, ஆராயுங்காலத்தே கைப் பொருள்யாதும் இல்லாமல் செயல்களும் முடிவதில்லை. வித்து என ஒன்று இல்லாத காலத்தில் அதனால் வரும் விளைச்சலும் ஏதும் இல்லை. - நாணின்றி ஆகாது பெண்மை, நயமிகு ஊணின்றி ஆகாது உயிர்வாழ்க்கை;--பேணுங்கால் கைத்தின்றி ஆகாக் கருமங்கள்; காரிகையாய்! வித்தின்றிச் சமபிரதம் இல்