பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

189



392. சிரித்து மறக்கவும் -

நீர்வளம் நிறைந்த பொய்கைகள் மிகுதியாயிருக்கும் ஊரனே! பொருத்தமற்ற வேடிக்கைப் பேச்சினை ஒருவரால் எடுத்துச்சொல்லப்பட்டவர்கள், அவர்தம்மை வைதனர் என்றே கொண்டு, அவர் தொடர்பைக் கைவிட்டு விடுவது தவறு. அப்படிச் செய்வது, எலி, விளக்கினைக் கொண்டு ஏறி அதன் காரணம்ாக வீடே தீப்பற்றித் தனக்கே ஆபத்தைச் செய்து கொண்டுவிடுவதுபோன்றதாகும்.

எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப்பட்டவர் வைதாரக் கொண்டு விடுவர்மன், அஃதால் புனற்பொய்கை ஊர! விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல்.

கேலியாகப் பேசும் பேச்சுக்களை வைததாகக் கொண்டு, சொன்னவர்மேல் சினமும்,பகைமையும்கொள்வதுபேதைமை யான செயல் என்பது கருத்து விளக்கெலி கொண்டு தனக்கு நோய் செய்து விடல் என்பது பழமொழி. - 392 393. பொருள் பேணாதவன் -

இனிய இயல்பினையும், மையிட்டமதர்த்த கண்களை முடையவளே! முன்னமே தன்னிடம் உளதாயிருந்த செல்வத் தைக் காத்துப் பேணாமல் கைசோரவிட்டு இருந்து, பின்னர் அதனைப் பற்றி மிகவும் ஆராய்ந்து, மீண்டும் அதனைத் தேடிக்கொள்ளு தலாகிய தன்மை மிகவும் அறிவற்ற தன்மை யாகும்.அது மயிலின் தலைமேல்வெண்ணெயைவைத்து,அது உருகி அதன் கண்களை மறைக்கும்போது அதனைப் பிடித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது போன்றதாகும்.

முன்னை யுடையது காவாது இகந்திருந்து பின்னையஃதாராய்ந்து கொள்குறுதல்-இன்னியல் மைத்தடங்கண் மாதராய், அஃதாதல் வெண்ணெய்மேல் வைத்து மயில் கொள்ளுமாறு. -

"கொக்குத்தலையில் வெண்ணெய் வைத்துப்பிடிப்பது எனவும் வழங்குவர். உள்ளதை இழந்துவிட்டுப் பின் அதற்காக வாடி வருந்தி வீணாக முயல்வது கூடாது என்பது கருத்து. "வெண்ணெய்மேல் வைத்து மயில் கொள்ளுமாறு’ என்பது பழமொழி. - - - 393