பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

191



396. தக்கபடி நடக்க வேண்டும் - தம் காரியம் கெடும்படியாகச் செய்ய நினைப்பவரி டத்திலே, அவரிடத்து நல்ல தன்மை உடையவர்போல நடந்து அவரை ஒதுக்க வேண்டும். பொருளைப் பேணிச் செயலை முடிப்பவரிடத்து அதனை அறியாதார்போலக் காட்டி அவரை விரைந்து செய்வதற்குத் தூண்டுதல் வேண்டும். இப்படி, அவரவர்க்குத் தக்கபடி நடந்து காரியத்தைச் சாதித்துக் கொள்வதே அறிவுடைமையாகும்.அது,வெந்நீரிலே,வேண்டும் வெம்மைக்குத் தக்கபடி தண்ணிர் வளாவிக் கொள்வது போன்றதாகும். - -

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும், பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும், அந்நீரவரர்க்குத் தக்காங்கு ஒழுகுபவே - வெந்நீரில் தண்ணி தெளித்து. பணியாளருள், அவரவர்கட்குத் தக்கபடி நடந்து காரியத்தை முடித்துக் கொள்வதே சிறப்பு என்பது கருத்து. ‘வெந்நீரில் தண்ணிர் தெளித்து ஒழுகுபவே என்பது பழமொழி - - 396 397. தன்குற்றம் தீர்த்தல் -

தம்பால் அமைந்திருக்கும் குறைபாடுகளை நீக்காத வராகிய ஒருவர், பிறருடைய குற்றங்களைத் தீர்ப்பதற்கு முனைந்து எங்கேனும் இடையிலே புகுதல் பொருந்தாததாகும். பெரிய உலகத்தினுள்ளே,வெள்ளாடானது எங்கும் தன்னுடைய வாதநோயைத் தீர்த்துக்கொள்ளமாட்டாது; ஆனால், பிறருக்கு வந்த வாதநோயைத் தீர்க்க உதவும். இதனைப் போன்றதே. அவருடைய செயலும் • * -

தங்குற்றம் நீக்கலராகிப் பிறர்குற்றம் எங்கேனும் தீர்த்தற்கு இடைப்புகுதல்-எங்கும் வியனுலகின், வெள்ளாடு தன்வளி தீராது

அயல்வளி தீர்த்து விடல். - தன்குற்றத்தைப்போக்காதஒருவர்.பிறருடைய குற்றத்தை நீக்குவதற்கு முயலுதல் பொருந்தாது என்பது கருத்து. 'வெள்ளாடு தன்வளிதீராது அயல்வளிதீர்த்து விடல் என்பது பழமொழி, வளி-வாதநோய். 397