பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

பழமொழி நானூறு மூலமும் உரையும்



398. மதிப்பும் தேவையும்

பூண்கள் பொருந்திய மார்பினை உடையவனே தலைமை யினையுடைய மன்னரைச் சார்ந்து வாழ்பவர்கள், தாம் வறுமை யால் துன்புற்றாலும், அவரிடத்தே ஒன்றினை வேண்டுவோம் என்பதைப் பற்றிச்சொல்லவேண்டாம்.பிறரால் மதிக்கப்படுவர், எதனையும் வேண்டாதவர்போலக் காட்டிநடத்தலே, அவர்க்கு வேண்டியனவெல்லாம் கொண்டு தருவதான சிறந்த வழியாகும்.

ஆண்டகை மன்னரைச் சார்ந்தார்தாம் அல்லுறினும் ஆண்ட்ொன்று வேண்டுதும் என்பது உரையற்க பூண்தாங்கு மார்ப! பொருடக்கார், வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும்.

மதிப்புடையவர், தமக்கு வேண்டியதைத் தாமே வாய் திறந்துகேட்பது கூடாது; அவர் கேளாமலே இருந்தால் எல்லாம் வரும் என்பது கருத்து. வேண்டாமை வேண்டிய தெல்லாம் தரும் என்பது பழமொழி. 398 399, எங்கும் இன்பம் . நல்ல தருமங்கள் செய்யும் ஒருவன்,இந்த உலகத்திலானால் நல்ல புகழைப் பெறுவான், இந்த உலகத்தைவிட்டு மேலுலகம் சென்றால், அங்கும் அவனுக்கு அது இனிதாகவே விளங்கும். இதனால், நாள்தோறும் நல்ல தருமங்களைச் செய்பவர்களுக்கு, இரண்டு உலகங்களுமே, கவட்டை நெறியிலே உளவாகிய விருந்துச் சாப்பாடுகள் போன்றனவாகும்.

ஈனுலகத் தாயின் இசைபெறுஉம், அஃதறிந்து ஏனுலகத் தாயின் இனிததுஉம்:--தானொருவன் நாள்வாயும் நல்லறம் செய்வாற்கு இரண்டுலகும் வேள்வாய்க் கவட்டை நெறி. இருந்தால் புகழ் இவ்வுலகில் இறந்தால் இன்பம் மேலுலகில், ஆகவே, நல்லறம் செய்க என்பது கருத்து. வேள்வேட்டம்; விருந்துணவு; எந்த வழியிலும் கிடைக்கும் என்க. “வேள்வாய்க் கவட்டை நெறி இரண்டுலகம்’ என்பது பழ மொழி. - 399 400. பொருளே வலிமையுடையது - தம் தகுதியைத் தெளிவாக அறியும் அறிவின்றி ஒழுகி வரும் அறிவுத்திறன் அற்றவர்களின் பகைமையைப் பொருளின் துணை கொண்டு போக்குதலே சிறந்ததாகும். பொருளைக்