பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

புலியூர்க் கேசிகன் . . . . 193

கொடுத்தால் அதனைக் கண்டு மயங்காது தாமதித்து நிற்பவர் எவரிருக் கிறார்கள்? வேலினாற் குத்துதலைவிடக், காணிப் பொன்னினால் குத்துவதே வலிமையுடன் எதிரியின் உள்ளத்திலே பாயும் என்று அறிக.

தெருளா தொழுகும் திறனிலாதாரைப் - . பொருளால் அறுத்தல் பொருளே-- பொருள்கொடுப்பின் பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? வேற்குத்தின் காணியின் குத்தே வலிது. -

ஈட்டி எட்டின மட்டும் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும் என்ற கருத்தை விளக்குவது இது."வேற்குத்தின் காணியின் குத்தே வலிது’ என்பது பழமொழி. காணி-காணிப்

பொன்.

  • * *