பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

பழமொழி நானூறு மூலமும் உரையும்



ளாமல் அம்பு எய்து பசுவைக் கொன்று பால் கறக்க முயல்வது போன்ற பேதைமையான செயலும் ஆகும். -

அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது, நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வதே கன்றுவிட்டு ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய், அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு. செயலை முடிக்கும் முறைமை இதன்கண் கூறப்பட்டது, பிறரை மனம் நோகச் செய்து காரியம் சாதிக்க நினைப்பவரின் பேதைமையும் சொல்லப்பட்டது. ‘அம்புவிட்டு ஆக்கறக்கு மாறு’ என்பது பழமொழி. 13 14. இனத்தைக் கொண்டே மதிப்பிடலாம்

கயல் மீன்களையும் தம் நீட்சியால் மாறுபாடு கொள்ளச் செய்யும் மை தீட்டிய கண்களை உடையவளே! பக்கத்து வீட்டார்கள் அறியாதவாறு சமைத்து உண்பதென்பது ஒரு போதுமே இயலாது. அதனால் ஒருவருடைய தன்மையை அறியப் பெரிய முயற்சிகள் எதுவுமே தேவையில்லை. காட்டில் வாழும் முனிவர்களே என்றாலும், அவர்கள் நல்ல இயல்பினர் களா அல்லது தீய இயல்பினர்களா என்பதை, அவருடன் சேர்ந் திருப்பவர்களைக் கொண்டேஅறிந்து கொள்ளலாம்.அவரியல் பைமெய்ப்பிக்க வேறு சாட்சிகள் எதுவுமேவேண்டாம். முயறலே வேண்டா முனிவரையானும் இயல்பன்னர் என்பது இனத்தால் அறிக! கயலிகல் உண் கண்ணாய் கரியரோ வேண்ட்ா, அயலறியா அட்டுணோ இல்.

'இனத்தைக் கொண்டுதன்மையை அறிக' என்று சொல்லி நல்லினம் சேர்தலின் இன்றியமையாமை வற்புறுத்தப்பட்டது. அயலறியா அட்டுணா இல் என்பது பழமொழி. 14 15. பயன்நோக்கிச் செய்வது உதவியாகாது

இதழ் விரிந்த பூக்கள் பலவும் ஆற்றிலே ஒன்றாகக் கலந்து செல்லும் புதுப்புனல் வளத்தையுடைய ஊரானே! சிறிய பொருளினை ஒருவர்க்குக் கொடுத்து உதவித் தாம் செய்த அந்தக் காரியத்தால், பின்னர் அதனால் பெரும் பொருளை அடைய நினைப்பவர்கள் தர்மவான்களே அல்லர். அவர்கள் விரும்பப்படும் அயிரையாகிய சிறு மீனைத் தூண்டிலிலே கோதுவிட்டுப், பெரிய மீனாகிய வரா அலைப் பிடிக்கின்றவர்களைப் போன்றவரே யாவர்.