பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பழமொழி நானூறு மூலமும் e-sолцib -

விதமான தாழ்ச்சிகள் வந்த காலத்தினும், அறிவுடையவர், உயர்வாகவே எண்ணி மதிப்பார்கள்.

இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும், உணர்பவர் அஃதே உணர்ப;--உணர்வார்க்கு அணிமலை நாட அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்.

வறுமை முதலியவற்றால் தாழ்ச்சியடைந்த காலத்தினும், குடிப்பிறப்பின் உயர்வு ஒருவரை விட்டு என்றும் மாறாது.சான் றோர் அவரை மதித்துப் போற்றுவர் என்பதாம் அளறாடிக் கண்ணும் மணிமணி யாகிவிடும் என்பது பழமொழி 21 . 22. உறவாடும் பகைவரை ஒதுக்கி விடவேண்டும்.

பறவைகளின் ஆரவாரத்தைக் கொண்ட பொய்கை களையுடைய நீர்வளமிகுந்த ஊரனே! பகைவர்கள் வெள்ளம் போற் பெரும்படையினை உடையவர்கள் என்றாலும், அவர் வேற்றிடத்தினராயிருந்தால் அவர்களால் என்ன தீங்கைச் செய்துவிடமுடியும்? ஆனால், உள்ளத்திலே கள்ளம் உடைய வராக நம்முடன் நெருங்கிப் பழகுபவரின் பெரிய போலி நட்பு இருக்கிறதே, அது மிகவும் கேட்டைத் தரும், அதுதான் ஒரே வீட்டிற்குள்ளேயே கடன் பட்டதுபோல இடையறாத பெரிய வேதனையைத் தருவதுமாகும். -

வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்? கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ, அள்ளில்ல துண்ட தனிசு. -

உட்பகையின் பெருங்கேடு கூறி, அதனை ஒறுத்து நடத்தும் நெறி வற்புறுத்தப்பட்டது. தனிசு-கடன் ‘அள்ளில்ல துண்ட தனிசு என்பது பழமொழி. - 22 23. தருமம் செய்யப் பாவம் போகும்

செல்வத்தைத் தேடுவதற்கு வேண்டிய புறச்செயல்களைச் செய்ய, வறுமை நீங்கிச் செல்வமானது பெருகும். அதுபோல, நல்ல தருமங்களைச் செய்யப்பழைய பாவங்கள் எல்லாம் நீங்கிப் போய்விடும்.ஆதலால், தருமஞ்செய்யும் இடத்தின் தகுதிகளை அறிந்து செய்த காலத்திலே, தருமம் செய்பவர்களுக்கும் அவர் கள் செல்லும்மறுமை உலகத்தின்கண் அதனால் நன்மை உண்டாகும்

அறஞ்செய்பவர்க்கும், அறவழி நோக்கித் திறந்தெரிந்து செய்தக்கால், செல்வழி நன்றாம்;