பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

13



புறஞ்செய்யச் செல்வம் பெருகும் அறஞ்செய்ய -

அல்லவை நீங்கி விடும். - அறம் செய்பவரும், தகுதி உடையவர்க்கே அதனைச் செய்வதனால்தான் அறத்தின் பயனை உண்மையாக அடை வார்கள்."அறம் செய்ய அல்லவ்ை நீங்கி விடும் என்பது பழ மொழி, 'அறம் செய்யப் பாவம் நீங்கும் என்பது கருத்து. 23 24. அவன் மயக்கம் தெளியவில்லை. - தொடியணிந்த தோள்களையும், மடப்பத்தையும் உடைய வரான பரத்தையர்களின் மார்பினைத்தன் மார்பிலேசேர்த்துக் கொண்டவனாக, அவர்களுடைய மார்பிலே நம் தலைவன்

மயங்கிக்கிடக்கின்ற அச்செயலானதுமுறைமை உடையதன்று.

அதனை, நீ அவன்பாற் சொல்லா திருப்பாயாக. பாணனே! 'பொய்துக்கம் தூங்குபவரை எழுப்பி விடுதல்’ என்பது எவருக்குமே முடியாத செயலாகும். • *

தொடித்தோள் மடவார் ம்ருமந்தன் ஆகம் மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப, நெறியல்ல சொல்லல்நீ, பாண அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது. - தலைவனுக்காகத் தலைவியிடம் சமரசம் பேச வந்த பாணனிடம் தலைவனின் பரத்தையர் மோகம் இன்னும் தெளியவில்லை என்று கூறித் தலைவி மறுத்துச் சொல்லு கிறாள். அறிதுயில்-யோக நித்திரையுமாம்; இங்கே அது பொய்த்துயில் ஆகும்."அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது’ என்பது பழமொழி. . .24 25. அறிந்து செய்யும் அறியாமைச் செயல்

செறிந்த மடல்களையுடைய, அழகிய தாழை மரங்கள் பொருந்தியிருக்கும் கடற்கரைக்கு உரிய தலைவனே! முல்லைக் கொடிக்குத் தேரினையும், மயிலுக்குப் போர்வையினையும் முன்காலத்திலே கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக நாமும், அறிந்துள்ளோம்.ஆகவே, சொல்லப்போவோமானால், சான் றோர்களுக்கு, அவர்கள் அறிந்தே செய்யும் அறியாமைச் செயல்க ளுங்கூடச் சிறப்பையே தருவதாயிருக்கும் என்று அறிவாயாக - - . .

முல்லைக்குத் தேரும், மயிலுக்குப் போர்வையும் தொல்லை, அளித்தாரைக் கேட்டறிதும்;--சொல்லின்,