பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

15


-

உறுகண் பலவும் உணராமை கந்தாத், தறுகண்மை ஆகாதாம் பேதை,--'தறுகண் - பொறிப்பட்ட வாறல்லால், பூணாது'என் றெண்ணி, அறிவச்சம் ஆற்றப் பெரிது. 'ஊழையும் உப்பக்கங் காண்பர் தாழாது உஞற்றுபவர் ஆனால் பேதையோ அனைத்தையும் ஊழின் பயன் என்று கருதி அஞ்சி, முயற்சியின்றித் துன்பங்களில் உழன்று அழிவான். 'அறிவச்சம் ஆற்ற்ப் பெரிது’ என்பது பழமொழி, 27 28. ஊழ்வினையால் அமைவதே செயல்

மதித்துச்சொல்லப்படுகின்ற பேரறிவு உடையவர்களிடத் தும் உளவான குறைபாடுகள் பலவாயிருந்தால், அதற்குக் கார ணம், அவர்களின் முன்வினைப் பயன் வந்து பொருந்தியதன் வகையாகவே செயல்கள் நிகழ்வதனால் என்க.அதனால், அவரு டையநல்ல அறிவினையும்கூட ஊழ்வினைகெடுத்துவிடும் என் றும் அறிதல் வேண்டும். -

சுட்டிச் சொலப்படும் பேரறிவினார்கண்ணும் . பட்ட இழுக்கம் பலவானால்-பட்ட பொறியின்வகைய, கருமம், அதனால், அறிவினை ஊழே அடும்.

மிக்க அறிவோரும், தவறான காரியங்களைச் செய்ய நேர்தல், ஊழ்வசத்தின் காரணமாகவே என்பது சொல்லப் பட்டது.பொறிதலை எழுத்து எனவும் சொல்வர்."இழுக்கம்:விருத்தம் என்றும் பாட பேதம், 'அறிவினை ஊழே அடும்’ என்பது பழமொழி. பொறியின் வகை கருமம் என்பதையும் ஒரு பழமொழியாகக் கருதலாம். 28.

29. வல்லவன் காரியம் கெடாது

நெடுங்காலமாக நீர் வற்றாது நிறைந்திருக்கின்ற ஒரு குளமானமு ஒருவர் சற்றே நீர் எடுத்துச் சென்றதனால், நீரற்றுப் போய்விடாது.அதுபோலவே, பல ஆண்டுகளாக வந்து சேர்ந்த தாகிப், பயனில்லாமல் சேர்ந்துகிடந்த செல்வத்தையும், கொடுத்தலிலே வல்லமை உடையவனான ஒருவன்,கொடுக்கும் தகுதியி னைத் தெரிந்து, தகுதியுடைவருக்கு வழங்கும் காலத்திலே, அதனால் வரும் ஆக்கமும் விரைவிலே நீங்காது நீடித்து நிற்கும்; அச் செல்வமும் என்றும் குறைந்து அழிந்து போய்விடாது; மென்மேலும் பெருகவே செய்யும். -