பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

பழமொழி நானூறு மூலமும் உரையும்



34. பொய்யைப் போக்கும் வழி

ஒரு பொருளாக மதித்துக் கொள்ளப்படத் தகுதி இல்லாதவர்கள் சொல்லிய பொய்யாகிய குறளையை, வேந்தன் பொய்யென்று தெளியுமாறு செய்யும் வகையினைத் தெரிந்து செய்பவரே அறிவுடையவர்கள், அப்படிச் செய்வதல்லாமல், உணர்வது உணரும் அறிவினை உடைய அவர்கள்,குறளையைச் சொல்லப்பட்டவர் அஞ்சும்படியாகத் தாமும் அவரோடு எதிர்த்து எழுந்து, மூங்கிலாற் செய்த பொய்க்காலைப்போலத், தாமும் குறளைபேசி ஆடவே மாட்டார்கள்.

பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன் தெருளுந் திறந்தெரிதல் அல்லால்--

வெருளவெழுந்து, ஆடு பவரோடே ஆடார். உணர்வுடையார், ஆடுபனைப் பொய்க்காலே போன்று.

'மணைக்கால்’ என்பதும் பாடம் அமைச்சர்கள், பொய் கூறி வேந்தன் மனத்தை எவராவது மாற்றினால், வேந்தனைத் தெளிவிக்கும் வகைகளை நாடுவாரே அல்லாமல், தாமும் அந்தப் பொய்யர்களோடு சேர்ந்து ஆடமாட்டார்கள் என்பது கருத்து. ‘ஆடுபனைப் பொய்க்காலே போன்று’ என்பது பழமொழி. உணர்வுடையார்-அறிவுடையார். 34 35. மக்களிடம் அன்பு - -

குற்றங் குறைகளுடைய மனத்தினன் அல்லாத, பெரிய நலங்களை எல்லாம் உடைய வேந்தனானவன், தன் குடிமக்களி டத்தே அன்புள்ள உள்ளத்தானாக நடந்துவரல் வேண்டும். அப்படி நடந்துவந்தான் என்றால், அவனைக்கொல்ல எண்ணும் பகைவர்கள், வேண்டிய அளவு முன்னுரைகள் எல்லாம் கூறிப் படை திரட்டினாலும், அவ்வரசனை என்ன ச்ெய்துவிட முடி யும்? ஆயிரம் காக்கையை ஒட்டுவதற்கு ஒரு சிறு கல்லே போது மானதுபோல, அவ்வேந்தன் ஒருவனே,அப்பகைவர்கள் அனை வரையும் தோற்று ஓடச்செய்து விடுபவனாவான்.

மறுமணத்தன் அல்லாத மாநலத்த வேந்தன் உறுமனத்த னாகி ஒழுகின் செறுமனத்தார் பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப? ஆயிரம் காக்கைக்கோர் கல். - 'தெறுமனத்தார் என்பதும் பாடம்.இதனால் ஆட்சியில் இருப்பவர்க்குக் குடிமக்களின் அன்புக்குப் பாத்திரமாவதே