பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

21



கண்ணிர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்ந்து விடும் என்பது பழமொழி. - 39 40. கற்றவர் எந்நாட்டினும் சிறப்படைவர்

கற்க வேண்டிய நூல்களை மிகுதியும் கற்று அறிந்தவர் களே அறிவுடையவர் ஆவார்கள். அத்தகைய அறிவினை உடையவர்களது புகழானது நாற்றிசைகளினும் சென்று பரவாத நாடேஇல்லையாகும் அந்நாடுகள் அவர்களுக்குவேற்று நாடுகளும் ஆவதில்லை.அவர்களின் சொந்த நாடுகளாகவே அவை விளங் கும். அங்ங்னமானால், அத்தகையோர் செல்லும் வழிக்குக்கட்டுச் சோறு கொண்டுபோக வேண்டியதும் இல்லை அல்லவா!

ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை--அந்நாடு; வேறுநாடாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவதில். கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் தம்நாடு போலவே மதித்துச் சிறப்பளிக்கும் நாடுகளாகும். ஆற்றுணா வேண்டுவதில் என்பது பழமொழி.ஆற்றுணா-வழிக்கு உதவும் கட்டுச் சோறு; அது வேண்டாம் எனவ்ே எங்கும் உபசரிக்கப் பெறுவர் என்பதாம். - 40 41. பகைவரைச் சூழ்ச்சியால் அழித்தல்

'மன வேறுபாடு' என்பது, எத்திறத்தார்களுக்கும் உள்ளதே. அவ்வேறுபாட்டால் கூறும் மாறுபட்ட சொற்களைஅதற்கு எதிராக அவர்கூறும் எதிர்மாற்றங்களே உடைக்கவல்லன.தம்பகைவர்களை அவரிடம் மிகுந்த பகைமை கொண்டுள்ளவரைக்கொண்டேஎளிதாகக்களைதல் வேண்டும். ஆதலால், அங்ங்ணம் தம் பகைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அழிக்கவல்ல வனே, தான் ஒருவனாகவே நூறு பேர்களைக் கொல்லும் பேராற்றல் உடையவனாவான்.

மாற்றத்தை மாற்றம் உடைத்தலால் மற்வர்க்கு ஆற்றும் பகையால் அவர்க்களைய-வேண்டுமே வேற்றுமை யார்க்குமுண் டாகலான் ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும். பகைவரிடத்து ஒட்டி நண்பரைப்போல நடந்து, அவர்ை அழிக்க வல்லவர்களைப் பெற்றால். எத்தகைய பெரும் பகை யையும் எளிதில் வென்று விடலாம்.'ஆற்றுவான் நூற்றுவரைக் கொன்று விடும் என்பது பழமொழி. - 41