பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

23



44. இல்லாததைத் தருவதாகச் சொல்லவேண்டா -

வேலினது தன்மையைப் பெற்று, முற்றவும் அமர்த்த கண்களையுடைய, பசிய வளையல்களை அணிந்தவளே மிகவும் நெருங்கிப்பழகியவர்கள் தமக்கொன்று வேண்டும் என்று கூறும் சொற்களைக் கேட்டால், தன்னிடத்திலே இல்லாத அப்பொரு ளைத் தன்னிடத்தே உடைய தொன்றாகவும் அதனைத் தாம் தருபவராகவும் உறுதியாகக் கூறினால், அங்ங்னம் வீணே கூறுதல், இடையனால் வெட்டப் பட்ட மரத்தினைப் போன்ற தாகும். -

அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால் உடையதொன் றில்லாமை யொட்டின்--படைபெற்று அடைய அமர்த்தகண் பைந்தொடி அஃத்ால் இடையன் எறிந்த மரம். இடையன் கொஞ்சங் கொஞ்சமாகத் தழையை ஒடித்தே ஒரு மரத்தை அழித்துவிடுகிறான்.அதுபோலவே இல்லாததைத் தருவதாக வாக்களிப்பவனின் புகழும் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து அழிந்து போம். இடையன் எறிந்த மரம் என்பது இக்கருத்தை விளக்கும் பழமொழி. - 44 45. கொடுப்பவனும் கொடுக்க மாட்டான் -

தன்னிடம் வந்துகேட்பவர்களுக்கு எதனையும் மறுக்கும் இயல்பில்லாதவனும், பலரும் தன்னிடத்தேயுள்ள ஒரு பொரு ளை வந்து யாசித்தால், அதனை அனைவருக்கும் தன்னால் கொடுக்க முடியாததனால், அவர்களுள் பெறாதவன் மயக்கம் அடைதலை நினைத்து மனம் பொறாதவனாகித், தன்னிடத்தே யுள்ள அப்பொருளை ஒளித்துவைத்து இல்லை யென்று மறைப்பான். அதனால் யாசித்து உண்பதற்குப் பலராகச் செல்லுதல் எப்போதும் தீமையையே தருவதாகும்.

மறாஅ தவனும் பலரொன் றிரந்தால் பெறாஅ அன்பேதுறுதல் எண்ணிப்-பொறாஅன் கரந்துள்ள தூஉம் மறைக்கும் அதனால் இரந்துட்குப் பன்மையோ தீது, இரந்து உண்ணுதலுக்குப் பலராகச் செல்லுதல் கூடாது. 'இரந்துாட்குப்பன்மையோ தீது”என்பது பழமொழிகொடுக்க நினைப்பவனையும் கொடுக்க விடாது செய்து விடும் என்பது இதன் கருத்தாகும். 45