பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

பழமொழி நானூறு மூலமும் உரையும்



50. நல்ல விதி இருப்பவன் சிறப்பு அடைவான்

பகைவர் இட்டநெருப்பினாலே காலிற் சுடப்பட்டு உயிர் பிழைத்துச் சென்ற பராந்தகச் சோழனின் மகனாகிய கரிகால் வளவனும், இரும்பிடர்த்தலையார் என்னும் பெயரையுடைய வரைத் தனக்குத் துணையாகப் பெற்று, பின் காலத்திலே தன் பகைவர்களை எல்லாம் வென்று, குற்றமற்ற செங்கோல் செலுத் தினான். அதனால், உயிருடையவர் முயன்றால் அடையாத தொழில் எதுவுமில்லை என்றறிக. & சுடப்பட்டு உயிருய்ந்த சோழன் மகனும் பிடர்த்தலைப் பேரானைப் பெற்றுக்-கடைக்கால் செயிரறு செங்கோல் செலீஇயினான்; இல்லை

உயிருடையார் எய்தா வினை.

முயற்சியுடையார் தம் உயிரைக் காத்துக் கொண்டால் என்றேனும் நல்வாழ்வு பெற்றே தீர்வர் என்பதாம். இல்லை உயிருடையார் எய்தா வினை’ என்பது பழமொழி. எனவே உயிரைக் காத்துக் கொண்டு ஆகும் கால்த்தை எதிர்நோக்கி செயலாற்றவேண்டும் என்பது கருத்து. 50 51. நாணயம் இல்லாதவனிடம் ஒப்பிக்க வேண்டாம்

கையினாலே தொட்டவர்களை ஒட்டிக் கொள்ளாத பொருள் உலகில் ஒன்றுமே இல்லை. சமையல் செய்தவரை ஒட்டிக் கொள்ளாத பாத்திரமும் கிடையாது. அதனால், கட்டுப்பாடு உடையதாக ஒருவனைத் தொடர்ந்து ஒரு செயலைச் செய்யுமாறு ஏற்படுத்துவதானால், அச் செயலி னோடு கலந்து, அதன் பயன் அனைத்தையும் உட்கொண்டு ஒடிவிடுகின்ற அன்பில்லாதவர்களை, ஒருபோதும் அதன்பால் வைக்கவே வேண்டாம். . -

கட்டுடைத் தாகக் கருமம் செயவைப்பின் பட்டுண்டாங் கோடும் பரியார்ைவையற்க தொட்டாரை ஒட்டாப் பொருளில்லை; இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம். -

ஒன்றைச்செய்ய ஒருவனைஏவும்பொழுது அவனே அந்தச் செயலின்பயனை எடுத்துக்கொண்டுபோய்விடும் இயல்புடைய வனானால் அவனை அதன்பால் ஈடுபடுத்த வேண்டாம்; வேறு தக்கவனையே ஏற்படுத்துக'இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்’ என்பது பழமொழி. 51