பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

29



56. படித்தவனிடமே பொறுப்பை ஒப்புவிக்கவும்

ஒரு செயலைச் செய்வதற்குரிய ஆளினை ஆராயுங் காலத்திலே, இவன் நம் உறவினன் என்றோ, உறவினன் அல்லாத வன் என்றோ கருத வேண்டாம். ஒள்ளிய பொருளை கற்றறிந்த ஒருவனை ஆராய்ந்து பார்த்து அவனிடமே அதை ஒப்புவிக்கவும். படித்தவன்,தன் உரிமையாளனின் பேச்சைக்கேட்பான்.அவன் கேளாமற்போனாலும் அது எருது உண்டுவிட்ட உப்பைப் போன்று நன்மை தருவதாக முடியுமே அல்லாமல், உடைமைக் காரனுக்கு நட்டமாகாது.

உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக் கற்றானை நோக்கியே கைவிடுக்க--கற்றான் கிழவனுரை கேட்கும் கேளான் எனினும் இழவன்று எருதுண்ட உப்பு. கற்றவனிடமே காரியத்தை ஒப்புவிக்க வேண்டும் என்பது கருத்து. எருது உப்பைத் தின்றாலும், அதிக உரமுடையதாக உரியவனுக்கு நன்றாக உழைப்பது போலக் கற்றவனும் உழைப்பான் என்பதாம்,"இழவன்று எருதுண்ட உப்பு’ என்பது பழமொழி. - - 56 57. கல்லாதவனுக்கு உபதேசிப்பதும் தீங்கே

நல்ல பெண்மைப் பண்புகளை உடையவளே! தாம் ஒழுக்கக் குறைபாட்டினாலே இழிவுடையவராவதைக் காட்டினும் ஒருவர்க்கு இழிவு தருவது யாதும் இல்லை. அதே போல ஒழுக்கத்தின் சிறப்பினாலே வரும் உயர்வைவிடச் சிறந்த உயர்வும் ஒருவர்க்கு யாதுமில்லை. இவை போலக் கல்லாதவர்களிடை யிலே சென்று உறுதிப்பொருள் பற்றிக் கட்டு உரைப்பதினும், மிகுதியான ஒரு பொல்லாங்கும் இல்லை என்று அறிவாயாக -

கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்கு--நல்லாய்! இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. கல்லாதவன், அதனைக் கேட்டதும் சொன்னவரையே அவமதிக்க முற்படுவான்; அதனால் பொல்லாங்கே மிகுதி யாகும் என்பது கருத்து. இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை ஒழுக்கத்தின் மிக்க உயர்வு’ என்பன இரண்டும் பழ மொழிகள். -- 57