பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பழமொழி நானூறு மூலமும் உரையும்



58. தொழுவதால் வினை மாறாது - -

இவ்வுலகத்து நம் வாழ்வு முழுவதையும், நாம் பிறவி எடுப்பதற்கு முன்பாகவே வகுத்துவிட்டவன் என்று கருதி, கடவுளைத் தொழுது கொண்டே இருந்தால், வந்த துன்பங்கள் எல்லாம் தாமே ஒழிந்து போய் விடுமோ? காவலைக் கைவிட்ட வன் பசுநிரையைக் காப்பாற்றுவதில்லை; அவ்வாறே முதலில் ஒலையைப் பழுதுபடஎழுதினவன்,தானே குற்றம் செய்தவனாக, அவனே மீண்டும் அதனை நேராது காப்ப வனாதல் என்பதும் ஒருபோதும் இல்லையாகும்.

முழுதுடன் முன்னே வகுத்தவன் என்று தொழுதிருந்தக் கண்ணே ஒழியுமோ அல்லல் இழுகினா னாகாப்பதில்லையே முன்னம் எழுதினான் ஒலை பழுது. ஊழ்வினையால் துன்பம் வருவதாயினும், அதனை முயற்சியால் மாற்றிக் கொள்ளலாமே தவிரத்தெய்வங்களைத் தொழுது மட்டும் மாற்றிக் கொள்ளமுடியாது. இழுகினான் ஆ காப்பதில்லையே முன்னம் எழுதினான் ஒலை பழுது’ என்பது பழமொழி:இழுகினான் ஆகாபப்பது இல்லை; முன்னம் ஒலை பழுதாக எழுதினான், அவனைக் காப்பதுமில்லை என்க. 59. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

சிறப்பினையுடைய தன்னுடைய இனமெல்லாம் தன் உடனே இல்லாமற் போய்த் தனித்துக் காணப்பட்ட இடத்தும், இளையது என்று கருதியும், எவரும்பாம்பினை இகழ்ச்சியாகக் கருதமாட்டார்கள்.அதுபோலவே, சிறந்த தகுதிகளை உடைய மன்னர்கள் தம்முடைய சிறந்த நிலைமையனைத்தும் கெட்டுப் போய் விளங்கிய காலத்தும் அந்த நிலைமையப் பார்த்து, அதற்குத் தக்கபடி அவரை இழிவாகக் கூறி யாரும் இகழ்ந்து பேசவே மாட்டார்கள். -

சீர்த்தகு மன்னர் சிறந்ததனைத்தும் கெட்டிாலும் நேர்த்துரைத் தெள்ளார் நிலைநோக்கிச்--சீர்த்த கிளையின்றிப் போஒய்த் தனித்தாயக் கண்ணும் இளைதென்று பாம்பிகழ்வார் இல். அரச குடிப்பிறப்பின் உயர்வு பிற கேடுகள் வந்த காலத்திலும் ஒருவரை விட்டுமாறாது; அவரை எள்ளற்கு யாரும் துணியார் என்பது கருத்து. இளைதென்று பாம்பி கழ்வார் இல்’ என்பது பழமொழி. 59