பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

33



தம் செல்வத்தை மறைத்து வைப்பவர்கள், இறைக்குந்தோறும் ஊறிப்பெருகும் கிணற்றினைப்பார்த் தேனும், பொருளின் உண்மைத்தன்மையை அறிய் மாட்டார்களோ?

இரப்பவர்க்கு ஈயக்குறைபடும்என் றெண்ணிக் கப்பவர் கண்டறியார் கொல்லோ--பரப்பில் துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப - இறைத்தொறும் ஊறும் கிணறு.

கொடையால் பொருள்மிகுதியாகும் நல்லூழ் ஒருவனுக்கு வந்து வாய்க்கும். இறைத்தொறும் ஊறும் கிணறு என்பது பழமொழி.'இறைத்த கிணறு ஊறும் இறையாத கிணறுநாறும் என்று இந்நாளில் வழங்குகிறதையும் நினைக்கவும். 64 65. மக்கள் விரும்புவன செய்க -

ஒன்றைச்செய்யவேண்டுமெனமனங்கொண்டஇடத்தும் பொருந்திவராத ஒன்றினை அறிவுடையோர் செய்யமாட்டார் கள். சான்றோர்கள் சொன்ன அறிவுரைகளை உள்ளத்திலே பெரிதாகக் கொண்டுபேணிக்காத்து வருதல் வேண்டும்.மக்கள் விரும்புவனவான செயல்களைச் செய்யக் கூடாதனவாகவே இருந்தாலும் செய்தலே வேண்டும்.செய்யக்கூடாதன விரும்பின தற்காக மக்களினத்தையே கழுவேற்றினவர் எவரும் இல்லை. மனங்கொண்டக் கண்ணும் மருவில செய்யார் கனங்கொண்டு உரைத்தவை காக்கவே வேண்டும் சனங்கள் உவப்பன செய்யாவும் செய்க இனங்கழுவேற்றினார் இல். மக்களிற்பெரும்பாலோரின் விருப்பத்திற்கு ஆட்சியாளர் கள் மதிப்புக் கொடுக்க வேண்டுமே தவிர, சட்டம் இப்படிக் கூறுகிறதென அவர்களுக்கு மாறுபட்டு நிற்றல் வேண்டாம்; அவர்களை ஒடுக்கவும் முயல வேண்டாம். “இனங்கழு வேற்றினார் இல் என்பது பழமொழி. 65 66. இனிமையாகவே பேசுக

ஒருவனைப் புன்மையான சொற்கள் துன்பத்திற்கொண்டு விடுமேயல்லாமல், இனிமையான சொற்கள் ஒருபோதும் துன்பத்திற் கொண்டுவிடுவதில்லை, புன்மையான சொற்களும் நன்மையான சொற்களும் தருகின்ற பயனை உண்மையாக உணர்வதற்கு வல்லவர்கள், வன்மையான பேச்சுப் பேசுகிறவர் களாக வாழ்ந்திருத்தலும் உண்டோ?