பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பழமொழி நானூறு மூலமும் உரையும்



புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ? புன்சொல் இடர்ப்படுப்பதல்லால் ஒருவனை இன்சொல் இடர்ப்படுப்ப தில். - -

இனிமையாகவும் நன்மைதரும் சொற்களாலும் பேசுவதே" சிறப்புடையது. இன்சொல் இனிதீன்றல் என்ற குறளையும் நினைக்க, 'இன்சொல் இடர்ப்படுப்பதில் என்பது பழமொழி. 66 67. ஒருவனை எதிர்க்க இருவர்

பெரிய மலைகளையுடைய நாட்டிற்கு உரியவனே! வேட்டையாடுதல் என்பது சிறிது பொழுதளவே என்றாலும் ஒரு நாயைக் கொண்டே இருவர் வேட்டையாடினால், அது துன்பந் தருவதேயாகும். அதுபோல, ஒருவன் சொல்பவை களைச் சொன்னால், அதனைக் காரணமாகக் கொண்டு, அவனுக்கு மாறுபட்ட இருவர்கள் ஒரேசமயத்தில் அதற்கு எதிர்வாதமிடத் தொடங்குதலும் தகுதி உடையதாகாது.

ஒருவர் உரைப்ப உரைத்தால் அதுகொண்டு இருவராவாரும் எதிர்மொழியல் பாலா பெருவரை நாட! சிறிதேனும் இன்னாது இருவர் உடனாடல் நாய்.

அவையிலே, ஒருவர் சொன்ன கருத்தினை ஒரே சமயத்திலே ஒருவர் தாம் மறுத்துப் பேசலாமே தவிரப் பலரும் எழுந்து மறுத் துப் பேசுதல் அவைப் பண்பு ஆகாது. பாலா - பண்பாகுமோ?'இன்னாது இருவர் உடனாடல் நாய் என்பது பழமொழி. . - 67 68. பேயையும் பிரிய முடியாது -

விளங்கும் அருவிகள் பாய்ந்து வீழ்கின்ற வளமுடைய மலைநாட்டிற்கு உரியவனே! விலங்கேயானாலும், தம்மோடு உடன் வாழ்தலைக்கொண்டிருக்கும் பழகியவர்களைக்கைவிட் டுப் போவதற்கு இசையாது; ஆதலால் பேயோடென்றாலும் முதலிலே பழகி விட்டால் பின்னர் பிரிவதென்பது துன்பம் உடையதாகவே இருக்கும்.

விலங்கேயும் தம்மோடு உடனுறைதல் மேவும் கலந்தாரைக் கைவிடுதல் ஒல்லா-இலங்கருவி தாஅய் இழியும் மலைநாட! இன்னாதே பேஎயோ டானும் பிரிவு.

0.