பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

37



பகையானவர்களோடு சேர்பவனாவானோ? சேரமாட்டான் என்க. -

உற்றால் இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான் மற்றவற்கு ஒன்னோரோடு ஒன்றுமோ!--தெற்ற முரண்கொண்டு மாறாய உண்ணுமோ? உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர். - 'தன் மன்னனிடம் பாசமுள்ள ஒரு வீரன், என்றும் துரோகக் கும்பலிலே சேரமாட்டான்' என்பது கருத்து. இதனால், வீரர்களின் இயல்பு சொல்லப்பட்டது. உண்ணா இரண்டேறு ஒருதுறையுள் நீர் என்பது பழமொழி. 73 74. கூற்றமும் உட்பகையும்

கூற்றமானவன், விதித்த ஆயுள்நாளை எண்ணிக் கொண்டே காத்திருந்து, உயிர்களைப் பற்றிச் செல்வதனை விரும்பித்திரிந்துகொண்டே இருப்பவன். என்றாலும், அப்படி ஒர் உயிரையும், தான் உண்ணும்காலம் வரும் வரையும் அவனும் காத்தே நிற்பான். அதுபோலவே கண்ணினுள் இருக்கும். கருமணியைப் போல் அன்புடன் நண்பு காட்டிப்பழகியபோலி நண்பாளர்க ளும், தமக்கு ஆகவேண்டிய பயன் நம்மால் முடிந்தன என்று எண்ணும் அந்தப்பொழுதிலேயே, நம்முடைய பகைவராகிநிற்பார்கள். -

கண்ணுள் மணியேபோல் காதலால் நட்டாரும் எண்ணும் துணையிற் பிறராகி நிற்பரால் எண்ணி உயிர்கொள்வான் வேண்டித் திரியினும் உண்ணுந் துணைகாக்கும் கூற்று.

போலி நண்பர்களை ஆராய்ந்து ஒதுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்த, அவர் இயல்பு கூறப்பட்டது.'உண்ணுந் துணைகாக்கும் கூற்று' என்பது பழமொழி. 74 75. பணியாளரை அன்புடன் நடத்துக r

தம், காரியங்களைத் தாமே திறமையுடன் முடித்துக் கொள்ளுவதற்கு ஆற்றல் இல்லாதவர்கள், தம்மால் அதற்கென அடையப்பெற்றவர்களையும்,தீமையானபதில்களாலே தமக்குப் பகையாக்கி விட்டு, அவர்கள் பகைமைக்குப் பயந்து, அவர்கள் அறியாததன் முன்பே தமக்குப் பாதுகாவலாக ஒடுதலை மேற்கொண்டு போய்விடுவார்கள். இவர்கள் செயல் தான், இரந்து உண்ணும் ஓடாகிய உண்கலத்தையே உடைப்பவனின் செயலைப் போன்றதாகும்.