பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பழமொழி நானூறு மூலமும் உரையும்



வண்டிமையினைப்பூசிக்கொண்டால் விகாரமே மிகுதியாகும்; அதுபோலவே ஆற்றலற்றவரை அடைபவரும் அவ மானமே அடைவார்கள் என்பது கருத்து. உயவு, நெய்யுட் குளிக்கும் ஆறு என்பதும் அதைப்போன்றுதான். 79 80. உருவின் உயர்வு -

அந்தநாளிலே,வாளாற்றல்உடையவனாகியதிருமாலைக் கொல்லும்பொருட்டு மது கைடவர் என்போர் வளைத்துக் கொண்டார்கள்.அப்போது, திருமால், தன்னுடைய திருமேனி யின் விளங்குதல் பொருந்திய பேரொளியைக் காட்டவும், ஒப்பற்ற அந்த வடிவழகின் தன்மையைக் கண்டு, அவர்கள் தம் நினைவைக் கைவிட்டார்கள். உருவப் பொலிவு ஒருவனுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதும் அதனைப் போன்றதுதான். வாட்டிற லானை வளைந்தார்கள் அஞ்ஞான்று வீட்டிய சென்றார் விளங்கொளி--காட்டப் பொருவறு தன்மைகண்டு அஃதொழிந்தார்; அஃதால் உருவு திருஆட்டு மாறு. உருவத்தோற்றத்தின் சிறப்பு இதன்கண் சொல்லப்பட்டது. இதனை, ஆங்கிலத்தில் பெர்சனாலிடி என்பார்கள். உருவு திருவூட்டுமாறு’ என்பது பழமொழி. திருமால் மோகினிப் பெண் வடிவிலே தோன்ற அவர்கள் மயங்கித் தமக்குள்ளேயே அடித்துக்கொண்டு இறந்தனர் என்பர். 80 81. இகழ்வான் இகழப்படுவான்

பலவாகிய பசுக்கூட்டங்களை மேய்ச்சற் புறங்களிலே காத்துநின்ற நெடியோனாகிய திருமாலேயானாலும், அவையில் ஒருவனை இகழ்ந்து பேசினால், தானும் அவனால் இகழ்ந்து பேசப்படுதலை அடைதலே உளதாகும். ஆகையால், பலரும் கூடியிருக்கின்ற அவையின் நடுவிலே நன்னெறியின் பால் ஒழுகிவரும் சான்றோர்கள், ஒருவரையும் அவர்கள் மனம் வருந்தும்படியான சொற்களைச் சொல்லி இகழவே மாட் டாாகள. -

பல்லார் அவைநடுவண் பாற்பட்ட சான்றவர் சொல்லார் ஒருவரையும் உள்ளுன்றப்-பல்லா நிரைப்புறங் காத்த நெடியோனே யாயினும் உரைத்தால் உரைபெறுதல் உண்டு.

'உரைத்தால் உரைபெறுதல் உண்டு என்பது பழமொழி. எவரையும் இகழ்ந்துபேசுதல் கூடாது என்பது கருத்து.அப்படிச்