பக்கம்:பழமொழி நானூறு-மூலமும் உரையும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன்

41



செருக்கும் றுப்பேசினால் அவரும் இகழத்,தலைக்குனிவே ஏற்ப டும் என்பது முடிவு. 81 82. நண்பரைப் பழித்தல் கூடாது -

கண்கள் விழித்திருப்பனபோன்று மலர்கின்ற நெய்தற் பூக்களையுடைய கடற்றுறைகட்கு உரியவனே! ஆராய்ந்து தெளிந்து கொள்ளப்பட்ட நண்பர்களைப் பழித்து, அறிவுடை யோர்பலர் நடுவிலேசொல்லாடமாட்டார்கள் என்ன காரணம் என்றால், தமக்கு இழிவைத் தருவனபற்றிக் கனவு கண்டவர், அதனையாருக்கும் சொல்லமாட்டார்கள் என்பதனால், -

t f

கொழித்துக் கொளப்ட்ட நண்பி னவரைப் பழித்துப் பலர் நடுவண் சொல்லாடார்--என்கொல்? விழித்தலரும் நெய்தல் துறைவா! உரையார் இழித்தக்க காணிற் கனா.

நண்பரை பழிகூறித் தூற்றினால் அந்த இழிவு நம்மையும் வந்தடையும் என்பது கருத்து உரையார் இழித்தக்க காணிற் கனா என்பது பழமொழி. 82 83. முறையாகவே எதனையும் ஆராய்ந்து செய்க .

இந்த உலகத்தினுள்ளே இல்லாத ஒரு பொருளுக்குப் பெயரும் இல்லையாகவே இருக்கும். அதுபோலவே முடிந்து போன ஒரு செயலுக்கு முயற்சியும் வேண்டுவதில்லை. முடிவு றாது இடையிலே முறிந்த செயலுக்குப் பெருக்கமும் இல்லை. குற்றமறச் செய்யவல்லதான ஒன்றைச் செய்வதிலே வருத்தமும் கிடையாது. .

முடிந்ததற்கு இல்லை முயற்சி முடியாது ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம், வடிந்தற வல்லதற்கு இல்லை வருத்தம்; உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர். - எந்தச் செயலையும் குறைபாடில்லாமல் முற்றவும் செய்து முடிக்க வேண்டும் என்பது கருத்து உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர் என்பது பழமொழி. 83 84. அளவற்ற ஆசைப் படுபவர் . -

இந்த உலகத்திலே, அளவுக்கு அதிகமான பெருஞ் செல்வத்தை விரும்புகிறவர்கள் சிலர், அவர்கள், நலத்தின் தகுதிகளால் மேம்பட்ட அரசர்களுள்,நல்லவர்களைச் சார்ந்து அதனை ஈட்ட நினைப்பர். எனினும், அவர்களைச் சென்று